பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
புதினுக்கு எதிராக ரஷ்யாவில் போராட்டம்: ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது
மாஸ்கோ, ரஷியாவில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அதிபர் புதினுக்கு கடுமையான நெருக்கடியைத் தருவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அலெக்ஸி நவால்னி சட்ட பிரச்னை காரணமாக அந்தத் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது. இதையடுத்து, பலத்த எதிர்ப்பு எதுவும் இன்றி அதிபர் தேர்தலில்…
தென் கொரியாவிற்கு நிகராக தன் நேர மண்டலத்தை மாற்றிய வட…
கடந்த வாரம் நடைபெற்ற உச்சி மாநாட்டைத் தொடர்ந்து தென் கொரியவின் நேரத்திற்கு நிகராக, வட கொரியா தனது நேர மண்டலத்தை மாற்றி அமைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமையன்று உள்ளூர் நேரம் 23:30 படி, வட கொரியாவின் கடிகாரங்கள் அனைத்தும் 30 நிமிடங்கள் முன்னோக்கி நகர்த்தப்பட்டன. கொரிய ஒற்றுமையை…
காணாமல் போன துபாய் இளவரசி எங்கே? தகவல் வெளியிட வலியுறுத்தல்
காணாமல் போன துபாய் இளவரசி எங்கே என்ற தகவலை வெளியிட வேண்டும் என்று அந்நாட்டு அதிகாரிகளை ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. எமிரேட்ஸ் ஆட்சியாளர் ஷேக் மொஹமத் பின் ராஷித் அல் மக்டூமின் மகளான ஷேய்கா லத்தீஃபா, சுதந்திரமான வாழ்க்கை வாழ வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.…
கயானா நாட்டு மீனவர்கள் 12 பேர் கொன்று குவிப்பு- கடற்கொள்ளையர்…
தென்அமெரிக்க நாடான கயானாவில் இருந்து 4 படகுகளில் 20 மீனவர்கள் வடஅட்லாண்டிக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அண்டை நாடான சுரினாம் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு படகுகளில் வந்த கடற்கொள்ளையர்கள் கயானா நாட்டு மீனவர்களை தாக்கினர். அவர்களிடம் இருந்து பணம், மீன்கள் மற்றும்…
தண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்க அண்டார்டிக்காவில் இருந்து பனிக்கட்டி அகழும் திட்டத்தில்…
உலகில் கடும் தண்ணீர்ப் பஞ்சத்தை எதிர்நோக்கும் முதல் பெருநகரம் என்ற நிலைக்கு அண்மையில் தள்ளப் பட்டிருந்தது தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரம். சில மாதங்களுக்கு முன்பு இங்கு ஏப்பிரல் 16 பூஜ்ய நாளை அதாவது ஒரு சொட்டுத் தண்ணீர் கூடக் கிடைக்காத நாளை அந்நகரம் எட்டும் என நிர்ணயிக்கப் பட்டதால்…
இஸ்ரேலின் முயற்சி தோல்வி?
ஈரானின் அணுவாயுதத் திட்டங்கள் எனக் கூறப்படும் புலனாய்வுத் தகவல்களை வெளியிடுவதாகத் தெரிவித்து, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மேற்கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி, போதியளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று கருதப்படுகிறது. அவரது பிரதான இலக்காக, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கவனத்தைப் பெறுவதே காணப்பட்ட போதிலும், ஐரோப்பிய நாடுகளின்…
யூத இனப்படுகொலை: சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்டார் பாலத்தீன தலைவர்
யூத மக்களை பற்றியும், யூத இனப்படுகொலை பற்றியும் தான் தெரிவித்த கருத்துகளுக்கு பாலத்தீன தலைவர் முகமது அப்பாஸ் மன்னிப்பு கேட்டுள்ளார். யூத இனப்படுகொலை, ‘வரலாற்றில் நிகழ்ந்த மிகவும் கொடியதொரு குற்றம்‘ என்று வெள்ளிக்கிழமை அவருடைய அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த வாரத்தில் தொடக்கத்தில், மேற்கு கரையில் நடைபெற்ற…
திருமணத்தை உடனே நிறுத்துங்கள் – இளவரசர் ஹாரிக்கு மார்க்லேயின் சகோதரர்…
பிரிட்டன் அரியணை வரிசையில் ஐந்தாவதாக அமரவுள்ளவர் இளவரசர் ஹாரி. கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இளவரசர் ஹாரியும், அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவும் காதலித்து வந்தனர். இந்த ஜோடி, கடந்த டிசம்பர் மாதத்தில் நிச்சயம் செய்துகொண்டனர். இளவரசர் ஹாரி - மேகன் மார்க்லேயின் திருமணம் இந்த மாதம் 19-ம்…
வட, தென்கொரியா இடையேயான பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர உதவுவோம்…
அடுத்தடுத்த அணு ஆயுத சோதனைகள் மூலம் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை அதிகரித்து வந்த வடகொரியா அணு ஆயுத சோதனையை கைவிடுவதாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அறிவித்தார். இதையடுத்து 65 ஆண்டுகளாக நிலவிய பகையை மறந்து வடகொரிய, தென்கொரிய அதிபர்கள் சமீபத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த…
இரான் அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்தால் போர் மூளும் அபாயம் –…
இரான் அணு ஆயுதங்கள் பெறுவதை தடுப்பதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற வேண்டாம் என அமெரிக்க அதிபர் டிரம்பை ஐ .நா. பொது செயலாளரான அன்டோனியோ கட்டெரஸ் வலியுறத்தியுள்ளார். 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை பாதுகாக்கவில்லை என்றால் போர் மூளும் அபாயம் உள்ளதாக பிபிசியிடம் பேசிய கட்டெரஸ் தெரிவித்தார்.…
ஈரானின் ரகசிய அணு ஆயுத திட்டம் – அம்பலப்படுத்திய இஸ்ரேல்..
மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஈரான், அணு ஆயுதங்களை தயாரித்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக சில ஆண்டுகளுக்கு முன், ஐ.நா சபையில் புகார் கூறிய அமெரிக்கா, ஒபாமா ஆட்சிக்காலத்தின் போது ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கச் செய்தது. ஆனால், ஈரான்,…
ரஷ்யாவின் ராணுவ செலவினம் 20 சதவீதம் வீழ்ச்சி
ரஷ்யாவின் ராணுவ செலவினம், கடந்த இருபது ஆண்டுகளில் முதன்முறையாக சென்ற வருடம் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஸ்வீடனின் அமைதி நிறுவனமொன்று தெரிவித்துள்ளது. ஸ்டாக்ஹாம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம், ராணுவத்துக்கு உலக நாடுகள் எவ்வளவு செலவு செய்கின்றன என்பது குறித்த அதன் ஆண்டு மதிப்பீட்டில் 2017-ம் ஆண்டு ரஷ்யா 66 பில்லியன்…
ஐ.நா. சபைக்கு தென்கொரியா அழைப்பு
சியோல், ஐ.நா. சபை தீர்மானங்களை மீறி, உலக நாடுகளின் எதிர்ப்புக்கு இடையே 2006-ம் ஆண்டு முதல் தொடர்ந்து அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்றி வந்த வடகொரியா, இப்போது அவற்றை விட்டு விடுவதாக அறிவித்து உள்ளது. கடந்த 21-ந் தேதி முதல் அந்த நாடு அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை…
படை பலத்தில் சரிவா? என்ன சொல்கிறது ஆப்கானிஸ்தான்?
அமெரிக்க அரசின் அறிக்கை ஒன்று ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படைகளின் வலிமை கடுமையாக குறைந்துவிட்டது என கூறியதையடுத்து ஆஃப்கன் பாதுகாப்பு அமைச்சகம் தங்கள் நாட்டு கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்ளும் அளவுக்கு போதுமான படை வீரர்கள் தங்களிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. சிகர் என அறியப்படும் அமெரிக்க கண்காணிப்பு குழுவின் சமீபத்திய அறிக்கையில் கடந்த வருடத்தை…
நைஜீரியாவில் 2 இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல்: 60 க்கும் மேற்பட்டோர்…
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் மசூதி ஒன்றில் நிகழ்ந்த இரட்டை தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள முபி நகரில் உள்ள இந்த மசூதியில் பிற்பகல் தொழுகைக்காக முஸ்லிம்கள் தயாராகிக் கொண்டிருந்த நிலையில் மசூதிக்கு உள்ளேயும், வெளியேயும் இந்தத் தாக்குதல்கள்…
ஆப்கானிஸ்தான் பிபிசி செய்தியாளர் சுட்டுக் கொலை
பிபிசி ஆஃப்கன் சேவையின் செய்தியாளர் அகமது ஷா, ஆப்கானிஸ்தானின் ஹோஸ்ட் மாகாணத்தில் இன்று சுட்டுக்கொல்லப்பட்டார். இன்று திங்கள்கிழமை காலை ஆஃப்கன் தலைநகர் காபூலில் நடந்த இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலில் 8 பத்திரிகையாளர்கள் உட்பட குறைந்தது 25 பேர் கொல்லப்பட்ட நிலையில், வேறொரு சம்பவத்தில் பிபிசி செய்தியாளர் கொல்லப்பட்டுள்ளார். பிபிசி…
ஆஃப்கானிஸ்தானில் இரட்டை குண்டு வெடிப்பு: செய்தியாளர்கள் உட்பட 25 பேர்…
ஆஃப்கான் தலைநகர் காபுலில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 25 பேர் பலியாகி உள்ளனர். ஏ எஃப் பி செய்தி நிறுவனத்தின் புகைப்படக் கலைஞரும், அங்கு செய்தி சேகரிக்க சென்ற பல செய்தியாளர்களும் இதில் உயிரிழந்துள்ளனர். தனது முதன்மை புகைப்பட கலைஞர் ஷா மராய், இத்தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஏ எஃப் பி…
கொரிய தலைவர்கள் சந்திப்பு நீண்டகால அமைதிக்கு வழிவகுக்குமா?
தென் கொரியா அதிபர் முன் ஜே-இன் மற்றும் வட கொரியா தலைவர் கிம் ஜாங்-உன் சந்திப்பானது ஒரு வரலாற்று திருப்புமுனையை பிரதிபலிக்கிறது. இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையே போடப்பட்ட ஒப்பந்தமான - கொரிய தீபகற்பத்தின் சமாதானம், செழிப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்கான புதிய பன்முன்ஜொம் பிரகடனம், நீண்ட கால அமைதிக்கு…
ஈராக்கில் தேர்தல் அதிகாரிகளை சுட்டுக்கொல்லும் வீடியோவை வெளியிட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள்..
ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அவர்கள், ஈராக் படையினருக்கு எதிராக பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி, பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம், ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் இருந்து வந்த ஈராக் நகரங்கள் அத்தனையும் முழுமையாக விடுவிக்கப்பட்டு விட்டதாகவும்,…
மக்கள் முன்னிலையில் அணு சோதனை கூடங்களை இழுத்து மூடும் வடகொரியா..
65 ஆண்டுகள் நிலவிய பகையை மறந்து வட, தென்கொரிய அதிபர்கள் சமீபத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமே கொரிய பிராந்தியத்தில் அணு ஆயுத சோதனைகளை கைவிடுவது என்பதுதான். அணு ஆயுத சோதனைகள் நடத்தியது தான் வடகொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் கோபத்திற்கு…
கொரியப் பிரச்சனையின் வரலாறு: ஆ முதல் ஃ வரை
1953-ம் ஆண்டு கொரிய போர் முடிந்த பிறகு, தென் கொரியாவுக்குள் நுழையும் முதல் வட கொரிய தலைவராகியுள்ளார் கிம் ஜாங்-உன். ஆனால், இதற்கு ஏன் இவ்வளவு காலம் ஆனது. இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை எப்போது ஆரம்பித்தது. 1948 முன்பு ஒரே நாடாக இருந்த கொரியா ஏன் பிரிந்தது?…
ஏமனில் சவுதி கூட்டுப்படையினரின் விமான தாக்குதலில் 50 ஹவுத்தி போராளிகள்…
ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்பட பலப்பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்கள் வைத்து அந்த பகுதிகைளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர். சர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி…
வடகொரியா மீதான அழுத்தங்கள் தொடரும்: டிரம்ப்
வெள்ளிக்கிழமை தென் கொரியாவோடு நடைபெற்றுள்ள உச்சி மாநாடு வெற்றியடைந்தாலும், வட கொரியா மீது அதிகபட்ச அழுத்தங்களை வழங்குவதைத் தொடரப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருக்கிறார். அணு ஆயுதங்கள் இல்லாத கொரிய தீபகற்பத்தில் கொரியர்கள் எல்லாரும் ஒன்றாக வாழும் ஒரு நாள் வரும் என்று நம்புவதாக அவர்…