இலங்கைக்கு இரண்டு கப்பல்களை நிர்மாணித்து வழக்கும் திட்டத்தை கைவிடுமாறு மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி கே வாசன் இந்திய பிரதமரிம் கோரிக்கை விடுக்கவுள்ளார்.
இலங்கைக்கு கப்பல்கள் விற்பனை செய்யப்படுவதற்கு தாம் எதிர்ப்பை வெளியிடுவதாக வாசன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் பிரதமரை சந்தித்து வலியுறுத்தப் போவதாக வாசன் தெரிவித்துள்ளார்.
13வது திருத்தம் எவ்வித மாற்றங்களும் இன்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று தாம் பிரதமரிடம் கோரப் போவதாக குறிப்பிட்ட பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்றும் தாம் ஏற்கனவே வலியுறுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
கோவாவில் உள்ள கப்பல் கட்டுமான இடத்தில் இரண்டு கப்பல்கள் நிர்மாணிக்கப்பட்டு அவை 2017- 18 ம் ஆண்டுகளில் இலங்கையின் கரையோர பாதுகாப்பு பணிகளுக்காக வழங்கப்படவுள்ளதாக ஏற்கனவே இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீ ஒரு கோச டப்பா. உனது பேச்சு நீரில் போச்சு . நீ தமிழ் நாட்டின் இன்னும் ஒரு ஜால்ரா .