விஜய், அஜீத்துடன் மோதும் வைகைப்புயல்!

vadivelபொங்கல் வெளியீடாக வடிவேலுவின் ஜகஜல புஜபல தெனாலிராமன் படம் திரைக்கு வருகிறது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு வைகைப்புயல் வடிவேலு நடித்து வரும் படம்தான் ஜகஜல புஜபல தெனாலிராமன். இப்படம் ஆரம்பித்த நாளிலிருந்தே படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாயின. அதாவது, படம் டிராப் ஆகிவிட்டது, படப்பிடிப்பில் வடிவேலு ரகளை செய்கிறார் என்பதெல்லாம்தான் அது.

ஆனால் எப்படியோ படத்தின் 60 சதவீத படப்பிடிப்பை முடித்து விட்டார்களாம். இந்நிலையில் படத்தை வருகிற பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டம் தீட்டி வருகின்றார்களாம். ஏற்கெனவே பொங்கல் ஜல்லிக்கட்டில் அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா, கார்த்தியின் பிரியாணி ஆகிய படங்கள் உள்ளன.

தற்போது வடிவேலுவும் இந்த ரேசில் கலந்து கொள்ளப்போகிறாராம். இப்படத்தை போட்டா போட்டி புகழ் யுவராஜ் இயக்கி வருகிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது ஏ.ஜி.எஸ். நிறுவனம்.