சிம்புவுக்கு அக்காவாக ரம்பா மறுபிரவேசம் செய்ய உள்ளார்.
ஆடிய காலும் பாடிய வாயும் நிற்காது என்பார்கள். அது யாருக்கு பொருந்துமோ இல்லையோ திரையுலகினருக்கு சரியாக பொருந்தும். அதிலும் குறிப்பாக நடிகைகளுக்கு பொருந்தும்.
ரம்பா, இந்தப் பெயரை யாரும் அவ்வளவு சீக்கிரமாக மறந்திருக்க மாட்டீர்கள். ஆமாங்க, ஒரு காலத்தில் தமிழ் திரையுலகில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர்தான் இந்த ரம்பா. இவர், ரஜினி, கமல், விஜய் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். பின்னர் தொழிலதிபர் ஒருவரை மணந்து வெளிநாட்டில் செட்டில் ஆனார்.
இந்நிலையில் தனது அடுத்த இன்னிங்ஸ்க்கு தயாராகி விட்டாராம் ரம்பா. அதுவும் சிம்புவின் அக்காவாக தமிழில் மறுபிரவேசம் செய்ய இருக்கிறாராம். இனி, அக்கா, அண்ணி போன்ற நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க இருக்கிறாராம். கணவரைப் பிரிந்ததே ரம்பாவின் திரையுலக மறு பிரவேசத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது.
தெருவிலே பிச்சை எடுக்க சேம்ப தூக்காம இருந்தால் சரி
மோகன் ரீச் ! ரம்பாவின் தொடையை மறந்து விட்டார்களே , தமிழ் திரை உலகினர் !