கமலின் ஜோடியாக காஜல் அகர்வால்

kamal_kajal_001உத்தமவில்லன் திரைப்படத்தில் உலகநாயகனுக்கு ஜோடியாக நடிக்கப்போகிறாராம் காஜல் அகர்வால்.

விஸ்வரூபம் 2 படத்தை முடித்த கையோடு அடுத்ததாக உத்தம வில்லன் படத்தில் நடிக்கவிருக்கிறார் உலகநாயகன்.

நடிகரும், கமலின் நண்பருமான ரமேஷ் அரவிந்த் இயக்கும் இப்படத்தினை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது.

படத்திற்கு கிரேஸிமோகன் திரைக்கதை, வசனங்களை எழுதுகிறார், யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார் என்ற தகவலை இப்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆரம்பத்தில் கால்ஷீட் பிரச்சனையால் மறுப்பு தெரிவித்த காஜல் தற்போது நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.