மும்பையில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
மும்பையில் 15வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது. மும்பை திரைப்பட கழகமும், ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்டும் இணைந்து இந்த விழாவின் நடத்துகிறது. எட்டு நாட்கள் நடக்கும் இதன் துவக்க விழா மும்பையில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான் இந்த விழாவினை துவக்கி வைத்தார்.
பின்னர் விழாவில் பிரபல பிரெஞ்ச் இயக்குநர் கோஸ்டா கவ்ராஸ் மற்றும் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
விருதினை மகாராஷ்டிரா முதல்வர் ப்ருத்விராஜ் சவான் வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய கமல்ஹாசன், நான் இன்று இந்தளவுக்கு இங்கு வளர்ந்து இருக்கிறேன் என்றால் அதற்கு முக்கிய காரணம், ஷ்யாம் பெனகல், கவ்ராஸ், பாலச்சந்தர் ஆகியோர்களின் மூலமாகத்தான்.
என் போன்ற கலைஞர்கள் இன்னும் சினிமாவில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும், அதற்கு இதுபோன்ற சினிமா விழாக்கள் முக்கிய களங்களாக இருக்கிறது. நான் எதையும் எழுதி வைத்து இங்கு பேசவரவில்லை, அப்படி பேசினாலும் அது எடுபட போவதில்லை என்றார்.