இங்கிலீஷ்ல பிடிக்காத வார்த்தையே டயட் தான் என்கிறார் லட்சுமி மேனன்.
கும்கி படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் கொட மிளகாய் மூக்கழகி லட்சுமி மேனன்.
தற்போது ஜிகர்தண்டா, சிப்பாய், மஞ்சபை போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
மேலும் விஷாலுடன் ஜோடி சேர்ந்துள்ள பாண்டிய நாடு தீபாவளி சரவெடியில் வெடிப்பதற்கு தயாராக உள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், டீச்சராக நடித்துள்ள இப்படம் வெளியாவதில் மகிழ்ச்சி என்றும் என் உடல் எடைக்கு ஏற்றவாறு இந்த கதாபாத்திரம் அமைந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
மேலும் உடல் இளைப்பதற்காக ஜிம்மிற்கு போக மாட்டேன், டயட் என்ற பெயரில் பட்டினி கிடக்க மாட்டேன். இதெல்லாம் எனக்கு பிடிக்காத விடயம் என்கிறார் லட்சுமி மேனன்.