என் முன்னிலையில் கோட்டையில் தோண்டினால் நிச்சயம் தங்கம் கிடைக்கும் என சாமியார் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் ராஜாராவ் ராம்பைக்சிஸ் என்ற மன்னர் வாழ்ந்த கோட்டை தற்போது சிதலமடைந்து கிடக்கிறது.
இந்த கோட்டைக்குள் 1000 டன் தங்கம் புதைந்து கிடப்பதாகவும், இதனை மன்னரே கனவில் வந்து கூறியதாகவும் பிரபல சாமியார் சோபன் சர்க்கார் கூறினார்.
இதையடுத்து இந்திய தொல்லியல் துறையினர் கடந்த மாதம் 18ம் திகதி அங்கு அகழ்வாரய்வு பணியைத் தொடங்கினார்கள். இரண்டு வாரமாகியும் ஒரு கிராம் தங்கம் கூட அங்கு கிடைக்கவில்லை.
கோட்டையின் பல பகுதிகளில் தோண்டியும் எந்த பலனும் இல்லை. பழைய இரும்பு துண்டுகள், உடைந்த பீங்கான் பாத்திரங்கள், கண்ணாடி வளையல்கள் போன்றவைதான் வெளியில் வருகின்றன.
எனவே சாமியாரின் கனவு பொய்யானது.
இந்நிலையில் அவர், என்னை கோட்டைக்கு அழைக்க வேண்டும். என் முன்னிலையில் பள்ளம் தோண்டினால் நிச்சயம் தங்கம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ராணுவ வீரர்களை வைத்து கோட்டைக்குள் பள்ளம் தோண்ட வேண்டும், இதை நாட்டு மக்கள் பார்க்கும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.