இப்போது வரும் பெரும்பாலான படங்களில் பெண்களை கேலி, கிண்டல் செய்கிறார்கள் என்று தேவயானி தெரிவித்துள்ளார்.
பட்டாளம்,’ ‘காதல் சொல்ல வந்தேன்’ ஆகிய படங்களில் நடித்த பாலாஜி நாயகனாக நடிக்கும் படம் ‘மெய்யழகி’. நாயகியாக ஜெய்குவேதனி நடித்துள்ளார். ஆர்.டி.ஜெயவேல் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.
இதனிடையே மெய்யழகி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதன் டிரைலரை தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி வெளியிட, இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன் பெற்றுக்கொண்டார். விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகை தேவயானி, ‘‘இப்போது நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் வருவது குறைந்து விட்டது.
‘மெய்யழகி’ நல்ல கதையம்சம் கொண்ட படமாக அமைந்துள்ளது. இப்போது வரும் பெரும்பாலான படங்களில் காமெடி என்ற பெயரில் பெண்களை கேலி, கிண்டல் செய்கிறார்கள்! மச்சி, மச்சான் என்று வசனம் பேசுகிறார்கள்! குடிக்காரர்கள் ஆட்டம் போடும் ‘டாஸ்மாக்’ காட்சிகளும் நிறைய இடம் பெறுகின்றன. இது சமூகத்துக்கு நல்ல விஷயமாக தோணவில்லை என்றார்.
தொடர்ந்து பேசிய நடிகை சோனாவும், படத்தில் இடம்பெறும் ‘டாஸ்மாக்’ காட்சிகள் குறித்து பேசினார். ‘‘சமீபகாலமாக சில படங்களை பார்க்கவே பயமாக இருக்கிறது. அந்த அளவுக்கு பெண்களை இழிவுப்படுத்தும் காட்சிகள் இடம் பெறுகிறது. அது மாதிரி ‘டாஸ்மாக்’ காட்சிகள் இல்லாத படங்களே இல்லை என்று கூறும் அளவிற்கு’’ நிறைய படங்களில் டாஸ்மாக் காட்சிகளை வைக்கிறார்கள். இது ஆரோக்கியமான விஷயம் இல்லை’’ என்றார்!
அதற்குதான் .உங்க நாட்டு கலாச்சாரமே ,,எங்களுக்கு வேண்டாம் ,அம்மாவை வாடி போடி ,அப்பாவை அப்பன் என்று சொல்வது ,கதாநாயகன் ஒரு குடிகாரன் ,அவனை சுற்றி தறுதலைகள் ,கதாநாயகிகள் பெற்றவர்களை ஏமாற்றி காதலனோடு முன்னுக்கு ஒரு ஆட்டு ,பின்னால ஒரு ஆட்டு ,,,,இதுதான் உங்களின் இன்றைய சினிமா ,போங்கடி ,,,,,,,,,,,,,,,,,
பின்ன இருக்காதா ,இந்த நடிகைகள் என்ன குடும்பத்து குத்து விளக்கா ? போங்கடா கேலி செய்வதில் என்ன தப்பு இருக்கு ,,
தமிழ் திரையில் காண்பிக்கப்படும் பல காட்சிகள் மிகவும் கேவலமான நிலையில் உள்ளன.மரியாதையே இல்லாமல் பேசுவதும் குடித்து கும்மாளம் போடுவதும் பெரியவர்களை வாடா போடா என்று கூறுவதும் பெண்களை பாலியல் கண்களுடன் பார்ப்பதும் கற்பழிப்பு காட்சிகள் இது போன்று இன்னும் எவ்வளவோ –மிகவும் கேவலம். இதுதான் நம்மின் கலாச்சாரமா?
?