விஜயகாந்த்தின் அறிவுரையின் பெயரிலேயே விஷால் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார்.
விஷால், லட்சுமிமேனன், பாரதிராஜா நடிப்பில் தீபாவளியன்று வெளியான ‘பாண்டிய நாடு’ படம் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் படத்தை விஷால் சொந்தமாக தயாரித்திருந்தார். தனது தயாரிப்பில் வெளியான முதல் படமே வெற்றி பெற்றுள்ளதால் விஷால் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
விஷாலின் இந்த மகிழ்ச்சிக்கு முக்கிய காரணம் விஜயகாந்த் என்று கூறப்படுகிறது. ‘மதகஜ ராஜா’ படத்தை வெளியிடுவதற்காக விஷால் வினியோகஸ்தராக மாறினார். அந்த சமயத்தில் விஷாலிடம் தயாரிப்பாளராக மாறும்படி விஜயகாந்த் அறிவுரை கூறினாராம்.
தயாரிப்பாளராக தனக்கு கிடைத்த அனுபவங்களையும் விஷாலிடம் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார். துணிச்சலுடன் தயாரிப்பு துறையில் விஷால் இறங்குவதற்கு விஜயகாந்தின் அட்வைசும் ஒரு காரணமாம்.
தயாரிப்பாளராக மாறினால் உள்ளது குட்டிச்சுவராக மாறிடும், இவன் படதேல்லாம் பார்பதற்கு பதிலாக பலய உமைப்படத்தை பாத்துவிடலாம்!!!