காதல், காதல், காதலை தவிர வேறு எதுவுமில்லை : செல்வராகவன்

selvaragavanஉங்கள் ஸ்டைலை தாண்டி, வேறு மாதிரியான படங்கள்செய்யும் எண்ணம் இல்லையா?

எந்த மாதிரியான படம் செய்யணும்னு, நீங்களே சொல்லுங்க. அதே மாதிரி, நான் செய்றேன். எனக்கான எந்த பார்முலாவும் இல்லாமல், கடைசி வரை, நல்ல படங்களா கொடுக்கணும்னு தான் ஆசைப்படுறேன்.

‘இரண்டாம் உலகம்’ படத்திற்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார், இப்போது அனிருத்தும் சேர்ந்திருக்காரே?

ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைத்திருந்தார். தயாரிப்பாளர் கொடுத்த காலக்கெடுவில், படத்தை முடிக்க வேண்டிய காலம் ரொம்ப குறைவா இருந்தது. அதனால், அனிருத் உள்ளே வந்து படத்தை முடிக்க உதவினார். படத்தில், மூன்று சிறிய பாடல்களை கொடுத்திருக்கார்.

இதுவரை சொல்லாத விஷயங்கள், ஏதாவது, இந்த படத்தில் உள்ளதா?

இதுவரை நான் இயக்கிய படங்களில், கடவுள் பற்றி சொன்னதில்லை. இந்த படத்தில் சொல்லியிருக்கேன்.

‘இரண்டாம் உலகம்’ படத்தில் என்ன சொல்லப் போறீங்க?

காதல், காதல், காதல், காதலை தவிர வேறு எதுவுமில்லை. உண்மையான காதல் புரிந்தவர்கள், திரையரங்குகளில் படம் பார்த்து விட்டு, வெளியில் வரும்போது, சந்தோஷமான ஒரு உணர்வோட வருவாங்க.

நீங்க இதுவரை இயக்கிய படங்களில், இதுமாதிரி மற்றொரு படம் செய்யக்கூடாதுன்னு சொல்ற மாதிரி உங்க படம் ஏதும் இருக்கா?

நான் பண்ண எல்லா படங்களும் தான்; முதல் படத்தில் இருந்து வச்சிக்கங்களேன்.

தமிழ் இயக்குனர்களில் நீங்க வியந்து பார்க்கும் இயக்குனர் யார்?

மணிரத்னம்.

உங்க தம்பி தனுஷை வைத்து, அடுத்து எப்போ படம் இயக்க போறீங்க?

கொஞ்சம் டைம் ஆகும். ஏற்கனவே ஒத்துக் கொண்ட படங்களை முடிக்கவே கொஞ்ச ஆண்டு தேவைப்படுதே; பார்க்கலாம்.