இந்தியா ,சீனாவுடனான தனது எல்லை நெடுகே புதிய ராணுவப் பிரிவொன்றை உருவாக்கி நிலை நிறுத்தும் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.
இதன் மூலம் 50,000 கூடுதல் படையினர் இந்த எல்லையில் நிறுத்தப்படுவார்கள்.
இந்தப் புதிய பிரிவு மேற்கு வங்க மாநிலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்.
கடந்த ஆண்டில், சீனத்துருப்புக்கள், இந்திய நிலப்பரப்புக்குள் பல முறை ஊடுருவிய சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
சீனாவும் இந்த எல்லை நெடுகே துருப்புக்களை குவித்திருக்கிறது.
இமாயலப் பகுதிகளில் பல இடங்களில், எல்லைப் பிரச்சினை கொண்டிருக்கும் இந்த இரு நாடுகளும், 1962ல் ஒரு சுருக்கமான போரில் ஈடுபட்டன. -BBC