நோ சொன்ன கில்லி… நொந்து போன பிசின்!

asinதமிழில் நன்றாக வண்டி ஓடிக்கொண்டிருக்கும்போதே மும்பை வாலாக்களை தேடி ஓடினார் பிசின் நடிகை. கான் நடிகர்களோடு பிசினாக ஒட்டிக் கொண்டதில் ஒன்றிரண்டு படங்கள் கிடைத்தது.

இப்போது கான் நடிகர்கள் கைவிட்டதால் மீண்டும் தமிழ் பக்கம் வர துடித்துக் கொண்டிருக்கிறார். இதற்காக முன்பு தனக்கு நெருங்கிய நண்பராக இருந்த கில்லி நடிகருக்கும், கன் பட டைரக்டருக்கும் தூது விட்டுப்பார்த்தாராம் இரண்டு பக்கமுமே நோ ரெஸ்பான்ஸ்.

இந்தியில பீக்குல இருந்தப்போ ஒரு படத்துல கில்லி நடிகருக்கு ஜோடியா நடிக்க கேட்டப்போ பிசின் பெரிய நோ சொன்னாரே அதுக்கு பதில்தான் கில்லியின் இந்த சின்ன நோ.

வாழ்க்கை ஒரு வட்டம்ங்றது இதான்னு பிசின் நடிகை இப்போ நொந்து போயிருக்கறாராம். அதான் படம் எதுவும் இல்லியே பேசாம கல்யாணம் பண்ணிக்கோன்னு அச்சனும் அம்மையும் நச்சரிக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்.