-ஜீவி காத்தையா, செம்பருத்தி.கோம், நவம்பர் 25, 2013.
பிரதமர் நஜிப்பின் அதிகாரப்பூர்வ இல்லமான ஸ்ரீ பெர்டானாவிற்கான மின்சார செலவு பல மில்லியன் ரிங்கிட் ஆகியுள்ளது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டதால் நியுசிலாந்து நாட்டிலிருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்து விருந்து வைத்து விருந்தாளிகளை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கும் பழக்கமும் பெருந்தன்மையும் கொண்ட பிரதமர் நஜிப் வருத்தமடைந்துள்ளார்.
உலகத் தலைவர்களை இருளில் உட்கார வைத்து உணவு உட்கொள்ளச் செய்வதா என்று கேட்கிறார்.
ஏன், இருட்டில் உட்கார்ந்து சாப்பிட்டால் உணவு உள்ளே போகாதா? உலக மக்களில் எத்தனை மில்லியன் கணக்கான மக்கள் இரவில் விளக்கு வெளிச்சம் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களின் தலைவர்கள்தானே இங்கு வருகிறார்கள். அவர்களுடைய மக்கள் அனுபவிப்பதை அவர்கள் இங்கு அனுபவித்தால் என்ன குறைந்தா போய்விடுவார்கள்?
ஏன் மலேசியாவின் அனைத்து மூலைமுடுக்களிலும் வாழும் மக்கள் அனைவரும் கண்ணைப் பறிக்கும் மின்சார விளக்கொளியில்தான் உணவு உட்கொள்கிறார்களா?
பிரதமர் நஜிப் அவர் தரத்திலான உலகத் தலைவர்களுக்கு இருட்டறையில் உணவு கொடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தவில்லை. ரிம2.2 மில்லியன் அதிகமானது என்றுதான் சுட்டிக் காட்டினர்.
ஜிஎஸ்டி வரி போட்டே ஆக வேண்டும். இல்லையென்றால் நாடு திவாலாகி விடும் என்று ஆளுங்கட்சியினர் ஓலமிடுகின்றனர். இப்படி செலவு செய்து மக்களின் வரிப்பணத்தை வீணாக்கக் கூடாது என்பதுதான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நோக்கம்.
சீனாவின் அதிபர் மாவ் ஸே டோங் அவரது கோட்டின் கிழிந்து போய்விட்ட கைப் பகுதியை மட்டும் அகற்றி பழுதுபார்த்த பின்னர் அக்கோட்டை பயன்படுத்தி வந்தார். அவரது கையைக் குலுக்கிய தமது தந்தை அதைப் பற்றி தம்மிடம் கூறவில்லையே நஜிப் திருப்பி அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தமது நாட்டில் சட்டை இல்லாமல் வாழும் 30 கோடி (அன்றையக் கணக்கின்படி) மக்கள் சட்டை அணிகிற வரையில் சட்டை போட மாட்டேன் என்று கூறி பிரிட்டீஷ் பேரரசின் சக்ரவர்த்தியைக் கூட சட்டை அணியாமல் சந்தித்த ஒரு அரை நிர்வாண பக்கிரி நமது காலத்தில் வாழ்ந்திருக்கிறார்!
குடிசையில் கடைசிக்காலம் வரையில் வாழ்ந்த அந்த அரை நிர்வாண பக்கிரிக்குஉலகம் எழுந்து நின்று மரியாதை செய்தது.
மக்களுக்கு முன்னுரிமை என்று வாய் கூசாமல் பேசிக் கொண்டிருக்கும் பிரதமர் நஜிப் தமிழர்கள் (ஒரு காலத்தில்)மக்களுக்கு அளித்த முன்னுரிமை தத்துவத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
வரப்பு உயர நீர் உயரும்; நீர் உயர நெல் உயரும்; நெல் உயர குடி உயரும்; குடி உயர கோள் உயரும் என்பது தமிழர்களின் ஜனநாயக தத்துவமாகும்.
மக்களுக்கு போதுமான மின்சார வசதியிருந்தால், பிரதமருக்கு ஏன் இவ்வளவு என்று கேட்கமாட்டார்கள். குடி உயர்ந்தால், கோள் தானாகவே உயரும்.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட மின்சார செலவு சம்பந்தப்பட்ட ஒரு கேள்விக்கு இவ்வளவு வேகமாக பதில் கேள்வி கேட்ட பிரதமர் நஜிப், அரசாங்க ஜெட் விமானத்தை கும்மாளம் போட அவரது துணைவியார் பயன்படுத்தப்படுவது பற்றி நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஏன் இன்னும் எதிர்க்கேள்வி கேட்கவில்லை?
அண்மையில் வியட்நாம் போயிருந்தேன். அதன் தலைநகரமான ஹனோய் மாநகரை சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்தேன். அந்நாளில் சரித்திரப் புகழ் வாய்ந்த அந்நாட்டின் வீரமிகு தலைவர் ஒருவரின் சமாதிக்குச் சென்றேன். சமாதிக்கு அருகில் அவர் வாழ்ந்திருந்த வீட்டை மக்கள் பார்வைக்கு வைத்திருந்தனர். 30க்கு 30 அடி என்கிற அளவில் சிறிய வீடு. மலாய்க்காரர்களின் அந்நாளைய வீட்டைப் போன்று, [தாங்கா] படியேறி, அறைகளுக்குச் செல்லவேண்டும். சிறிய அளவில் இரண்டே அறைகள்தான், ஒன்று, அவர் படுத்துறங்கும் அறை, மற்றொன்று, உலகத் தலைவர்கள் வந்தால், அவர்களோடு பேச்சு நடத்தும் அறை. மின்சாரம் இல்லை. மண்ணெண்ணெய் விளக்குகள் மட்டுமே. அந்த மகான் யார் தெரியுமா? வியாட்நாமை விட்டு அமெரிக்கனையே ஓட ஓட விரட்டியடித்த மாவீரன் ஹோ சி மின். அதே வேலை எல்லா மலாய்த் தலைவர்களும் ஆடம்பர விரும்பிகள் என்று கூறுவதற்கில்லை. பழைய கிளந்தான் மந்திரி புசார், நிக் அசிஸ் நிக் மாட், மிகவும் எளிமையானவர். இவருக்கு கொடுக்கப்பட்ட அரசு மனையில் இவர் தங்குவதில்லை. புலாவ் மலாக்கா என்கிற கிராமத்தில், ஒரு சிறிய பலகை வீட்டில் வாழ்ந்து வருகிறார். உயர்ந்த மனிதர். அவர் வீட்டுக்கு பாதுகாவலரும் கிடையாது, வீட்டை சுற்றி முள் கம்பிகளும் கிடையாது.
மன்னிக்கவும். வியட்நாமின் வடக்கே ஒரு மாநிலத்தின் தலைநகரம் ஹனோய். அந்நாட்டின் தெற்கே சைகோன் மாநகரமே தலைநகரமாகும். தற்போதைய இதன் பெயர் ஹோ சி மின்.
கண்ணா லட்டு தின்ன வா போன்ற உணர்வு வந்தது. இவன் கொள்ளுகட்டையும் முழுங்கி விடுவான் போல இருக்கே ..ஓஃ இதுக்குத்தான் ஜி எஸ் தி கம்முக்கு வரியோ?
சார்! திருடனுக்கு ஒரே திருட்டு பயம்! அதனாலே நாளா பக்கமும் விளக்கு!
எதற்கெடுத்தாலும் பிரதமரை குறை சொல்லியே பழக்க பட்ட அன்பர்களே, பதவி ஏற்றவுடன் இகோநோமி வகுப்பில் பயணம் செய்த லிம் கோன் எங்க இப்போது முதல் வகுப்பில்தான் பயணம் செய்கிறார். அதுபோல எளிமையின் சிகரம் நிக் அசிஸ் மேர்செடிஸ் பயன் படுத்தினார். ஆனால் இது குறை சொல்லுபர்களின் கண்களுக்கு படாமல் போனது ஏன்? லிம் கோன் எங்க வெளிநாடு பயணங்களின் போது தன் மனைவியையும் அழைத்து செல்வதால் பினாங்கு மக்களுக்கு என்ன நன்மை?
தின்னுவர்!!!
Abd Wahab ,அவர்களே Althan Thuyaa பற்றி கொஞ்சம் விவரிக்க முடியுமா ? இலங்கைக்கு முண்டி அடித்து போனவனுக்கு ஆதரவ ? ச்சி
இக்கரை மாட்டுக்கு அக்கறை பச்சை ! அயல்நாட்டுக்கு ஏன் போகணும் , நம் நாட்டு இந்திய மக்களுக்காக இருபதையெல்லாம் வாரி வாரி கொடுத்துவிட்டு பரம ஏழையாய் வாழ்த்த நம், நம் V T சம்பதன் அவர்கள் எந்த வகையில் குறைத்து போனார் ? ஒவ்வொரு தோட்டங்களுக்கும் சேற்றிலும் சகதியிலும் நடையாய் நடந்து , தான் கட்டியிருந்த வேஷ்டியை செம்மண் புளுதில் புரட்டி , கிழித்து , கால் செருப்பு அறுத்து , தன் குரல் நீர்வற்றும் வரை மணிக்கணக்கில் மக்களுக்கு விழிப்புணர்ச்சி உண்டாகினாரே , மறக்கமுடியுமா ?? 10 வெள்ளி பணத்துக்காக இரவும் பகலும் (1957-1965) தகவல் இலாக்கா வாகனத்தில் நம் நாட்டையே சுற்றிவந்து பிள்ளைகை பள்ளிக்கு அனுப்புங்கள் , படிக்கவையுங்கள் , கல்வி இல்லையேன் நாளை உன் பிள்ளையும் உன்னைப்போல் கூளிகாரந்தன் என்று திறவுகோலாக இருதவரும் அவர்தானே ? அந்த உத்தம மாமனிதர் இல்லையேன் இன்று நானும் எழுத படிக்க தெரியாதவனாக போய் இருப்பேன் . இவர்மட்டும் அல்ல , இன்னும் எத்தனையோ மகான்கள் தலைமறைவாக , இலைமறை காயாக – வாழ்தார்கள் , வாழ்கிறார்கள் , எங்கே ?? இங்கே , நம் மலைநாட்டில் !!
abd wahab! ஆகா அதிகமான FDI ஈர்த்த மாநிலங்களில் பினாங்கும் ஒன்று,இதன் வருவாய் பன்மடங்கு bn மாநிலங்களை விட,இங்கு அனைத்து இனங்களுக்கும் சமமான அரசு சேவை .umno திருட்டு அரசாங்கம் உம்மை போல் நிறைய பச்சோந்திகளை வேலைக்கு வைத்திருப்பதும் நாங்கள் அறிவோம்.abd wahad! நீங்க நல்ல துக்கிரிங்க்கோ! மதன் சம்பளமா இல்ல நாள் சம்பலம்மா?
உலகில் உள்ள நாடுகளில் எல்லா வளங்களும் பெற்ற நாடு மலேசியா. “என்ன வளம் இல்லை நம் நாட்டினிலே, ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டினிலே” என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. எண்ணையில் ( பெட்ரோல்) மூலம் பல கோடி வருமானம். செம்பனை மூலம் பல கோடி, மின்னியல் சாதனங்கள் மூலம் பல கோடி. இன்னும் எவ்வளவோ. மாடு வாங்குவதற்கு 250 மில்லியன். 2013 – 2025 வரையிலான கல்வி பெருந்திட்டத்தை வரைய 20 மில்லியன், ஒரு அரசாங் இலாகா ஊழியர்களுக்கு காலணி வாங்க 600 ஆயிரத்திற்கு மேல். ( தரம் குறைந்த காலணிகள் என்பதால் வீசப்பட்டன) நான்கு நாள் “lawatan sambil belajar ” வுக்கு 300 ஆயிரதுக்கு மேல் ( ஒருவருக்கு மட்டும் ) இன்னும் எத்தனையோ மில்லியகள் – மக்களின் வரியில் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது பொருள் விற்பனை வரி. (ஜி.எஸ்.டி) மக்கள் வரியை தவறாக பயன் படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எந்த சரித்திரம் இல்லை. “ஒரே மலேசியா” கொள்கை பிரச்சாரத்திற்கு பல கோடி செலவிடப்பட்டது. இந்தக் கொள்கை வெற்றிப் பெற்றிருந்தால் புதிய ஒற்றுமை ஆலோசனை மன்றம் அமைக்கப்பட வேண்டிய அவசியம் இல்லையே! இந்த மன்றத்திற்கு எத்தனை கோடியோ? எல்லாம் அரசாங்க இரகசியம். வரி செலுத்துபவர்கள் கேள்வி எழுப்பினால் தேச நிந்தனைக் குற்றம் புரிந்தவறாகக் கருதப்படுவர். கவனம்.கவனம் கவனம்.எல்லாம் அம்னோ மயம். வினை விதைத்தவன் வினை அறுப்பான். .
இருட்டிலே தீனி போட்டால் எப்படிடா சாப்பிடுவான் !? நக்கி கூட சாப்பிட முடியாது ,,என்ன பேசி பேசுறேங்க?
ஐயா, Rajulla . டுன்சம்பந்தன் நல்ல மனிதர் ஆனால் சிறந்த தலைவர் என்று சொல்லமுடியாது. கொல்லைபுறம் வழியாக வந்ததால் துங்குவை தட்டிக் கேட்க முடியாமல் நமது உரிமைகளை காற்றில் விட்டத்தின் பயனை இப்பொழுது இந்தியர்கள் அனுபவிக்கிறார்கள். நாஜிஸ் அதற்க்கு விதி விலக்கல்ல.
இரவினில் ஆட்டம் ..பகலினில் தூக்கம் ..! இதுதான் நமது தலைவர்களின் ஓட்டம் ..?
உலகத் தலைவர்களுக்கு இருட்டில் வேற தீனி டின்னுராணுங்க ! அது தெரியுமா உங்களுக்கு
தெரியும் நண்பா..! அது குஜாலா தீனி..?
எலேய் கேனக் k ! இருட்டில் உட்கார்ந்து, நின்று படுத்துக்கொண்டு எப்படி வேண்டுமானாலும் தின்னலாம் இந்த நல்ல திட்டத்தை உன்வீட்டில் செயல்படுத்தலாமே ? பக்கிரி பேசாமல் மூடிக்கொண்டிருந்திருந்தால் வெள்ளையன் மேற்படி நாட்டை சீர்படுத்தி வளப்படுத்தி சிறிது காலம் ஆண்டு சுதந்திரம் கொடுத்து சென்றிருப்பான். அதை கெடுத்து சுதந்திரம் என்று நாட்டை துண்டாட செய்து அதனால் பல்லாயிரம் அப்பாவி மக்கள் மடிய யார் காரணம் ?அன்று 30இன்று110 மாபெரும் வளர்ச்சியல்லவா? இதுதான் இன்றைய நிலை! பொருளாதாரம், தனிநபர்வருமானம், கல்வி, அடிப்படைவசதிகள் இவை அனைத்தும் ஹீ ஹீ ஹீ ஹீ ஹீ இந்த லட்சணத்தில் வல்லரசு!!!எலேய் ..su மா சே துங் கோட் | கிழிந்து | சரிசெய்து | ரசாக் | நஜிப்பு | அடிக்கலையே என்னங்கடா நடக்குது !
மோகன் ஷ்ஷ்ஷ் ஷ் ஷ் ஷ் ஷ் ஷ் இப்பவே கண்ண கட்டுதுல, அண்ணாச்சியால முடியும்ல! இருட்டில நாய்உஸ், எலிஉஸ், புனை உஸ் இவையல நக்கி சாப்பிட முடியுங்கிறேன் !!!
!!!
puchandy! கிழி,கிழி,கிழின்னு நன்னா கிழிச்சிடியில் போங்கோ!
“நீதிபதி கே.டி.தாமஸ், விசாரணை அதிகாரி தியாகராஜன் போன்றோரின் வாக்குமூலங்கள் வந்த பிறகும், பேரறிவாளன் உள்ளிட்ட அனைவரையும் சிறையில் வைத்திருப்பது சட்டவிரோதம்! அவர்கள் அனைவருக்கும் தலா 10 கோடி இழப்பீடு வழங்கி உடனே விடுதலை செய்ய வேண்டும்.
இராசீவ் காந்தி கொலை வழக்கு பற்றி விசாரித்த சி.பி.ஐ.யின் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை அதிகாரி தியாகராஜன் ஐ.பி.எஸ்., என்பவர், பேரறிவாளன் நிராபராதி என்றும், அவருடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்யும் போது தான் கடமை தவறிவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். பேரறிவாளன் பேட்டரி வாங்கிக் கொடுத்தது உண்மையே என்றாலும், அந்த பேட்டரியைப் பயன்படுத்தித்தான் இராசீவ் காந்தியைக் கொல்லப் போகிறார்கள் என்ற செய்தி எனக்குத் தெரியாது என்று பேரறிவாளன் என்னிடம் சொன்னார். ஆனால் ‘எனக்குத் தெரியாது’ என்று அறிவு சொன்ன வார்த்தையை வாக்குமூலத்தில் நான் பதிவு செய்யவில்லை. ஏனெனில், வாக்குமூலம் அளிப்பவர்கள் சொல்வதையெல்லாம் அப்படியே எழுதுவது காவல்துறை மரபல்ல. காவல்துறை தயாரித்துள்ள வழக்குக்கு வலுச்சேர்க்கும் வகையில் தான், ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் என்பது வழக்கம். அதனால்தான், நான் பேரறிவாளன் சொன்னதை அப்படியே பதிவு செய்யவில்லை. இதன் காரணமாகவே பேரறிவாளன் மரண தண்டனை பெற்றிருக்கிறார் என்பது என் மனதை உருத்துகிறது என்று தியாகராஜன் கூறியிருக்கிறார்.
இதன் பொருள், ஒருவரை துன்புறுத்தி, அடித்து, உதைத்து, அவர் மீது என்ன குற்றத்தைக் காவல்துறை சுமத்தியிருக்கிறதோ, அதை அவர்களே ஒப்புக் கொள்ளும் வகையில் தயாரிக்கப்படுவது தான், ஒப்புதல் வாக்குமூலம் என்பது. தியாகராஜன் 16 பேரிடம் வாங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் இந்த வழக்கில் மரண தண்டனை, வாழ்நாள் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், வழக்கில் சிக்க வைக்கப்பட்ட 26 பேரும் அப்பாவிகள். நவநீதம் என்ற சவநீதம் பூந்தமல்லி நீதிமன்றத்தில், 26 பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்கினார். அது, உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீடு சென்ற போது, அங்கு National Collective consiciousness. அதாவது, தேசத்தின் கூட்டு மனச்சான்றின்படி, இவ்வழக்கில் மரண தண்டனை வழங்கியாக வேண்டும் என்று அங்கே 4 பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கினார்கள்.
இந்தியாவின் சட்டம் ஒரு மட்டம்
நாங்கள், கொலை செய்தவர்களை சும்மா விடச் சொல்லவில்லை. ஆனால், சும்மாயிருந்தவர்களை கொலை செய்யாதீர்கள் என்று தான் கேட்கிறோம்.
இந்தக் கொலையில் சுப்பிரமணிய சுவாமிக்குத் தொடர்பிருப்பது சி பி அய் க்குத் தெரியும், இருப்பினும் அவர் தமிழர் அல்லவே.. அதனால் தப்பித்தார்.