‘ஜில்லா’ பட பேனர்களுக்கு திடீர் தடை: ரகசிய உத்தரவால் விஜய் அதிர்ச்சி?

jillaவிஜய்யின் ஜில்லா பட பேனர்களை வைக்க காவல் துறையினர் தடை விதித்தார்களாம்.

விஜய் நடித்த துப்பாக்கி, தலைவா ஆகிய படங்கள் பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு வெளியானது நினைவிருக்கலாம். குறிப்பாக தலைவா பட பிரச்னை விஜய்யை பெரிய அளவில் பாதித்தது என்று சொல்லலாம். இந்தப் பிரச்னை பொங்கலுக்கு ரிலீஸாகவிருக்கும் ஜில்லா படத்திற்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் விஜய் ஆரம்பத்தில் இருந்தே தெளிவாக இருந்து வருகிறார். அதனால ஜில்லா படத்தில் எவ்வித பஞ்ச் வசனங்கள் இல்லாமல் பார்த்துக் கொண்டார். மேலும் படம் குறித்து பேசுவதையும் தவிர்த்தார். ஆனால் இப்போது ஜில்லா படத்துக்கு புதிய ரூபதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

பொங்கலுக்கு வீரம், ஜில்லா படம் திரைக்கு வருவது உறுதியாகி விட்டதால், ஜில்லா படத்தின் பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ‘ஜில்லா’ படத்தை வரவேற்கும் விதமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரிய சைஸ் பேனர்களை சென்னையிலுள்ள வடபழனி, கோடம்பாக்கம், விருகம்பாக்கம் ஆகிய ஏரியாக்களில் வைத்தார்கள் விஜய் ரசிகர்கள்.

அப்போது அந்த வழியாக வந்த காவல்துறை அதிகாரிகள் உடனடியாக’ஜில்லா’ பட பேனர்களை அகற்றச் சொல்லிவிட்டு, இனி இந்த ஏரியவுல பேனர்கள் எதுவும் வைக்கக் கூடாது என்றும் கடுமையாக எச்சரிக்கை செய்து அனுப்பினார்களாம்.

மேற்படி சீரியஸ் சமாச்சாரம் விஜய் காதுக்கும், தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி காதுக்கும் போய்ச்சேர, இது ஒருவேளை மேலிட ரகசிய உத்தரவாக இருக்குமோ? என்ற சந்தேகத்தில் ரெண்டுபேருமே ஒருசேர அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.

வழக்கம் போல என்ன செய்வதென்று தெரியாமல் விஜய் கைகளைப் பிசைந்து கொண்டிருக்க, தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரியோ தான் சார்ந்த சமூக ஜெயின் பகவானை விடாமல் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறாராம்.