உலகநாயகன் அனுமதிக்காக காத்திருக்கும் வெங்கட்

venkat_prabhuஉலகநாயகன் அனுமதிக்காக காத்திருக்கிறாராம் இயக்குனர் வெங்கட் பிரபு.

லிங்குசாமி படத்தினைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா.

இந்தப் படத்திற்கு கல்யாண ராமன் என்ற தலைப்பினை வைத்துள்ளனர்.

ஏற்கனவே இதே தலைப்பில் கமல்ஹாசன் நடித்து பஞ்சு அருணாசலம் தயாரிப்பில் திரைக்கு வந்த படம் சூப்பர்ஹிட்டாக அமைந்தது.

எனவே தான் இயக்கும் படத்துக்கு அந்த பெயரை வைப்பதற்கு அனுமதி தரும்படி கமலிடமும், பஞ்சு அருணாசலத்திடமும் கேட்க முடிவு செய்துள்ளார் வெங்கட் பிரபு.

இப்படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசை அமைக்க உள்ளார்.