அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் பகுபலி படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அனுஷ்கா தற்போது ‘ருத்ரமாதேவி’, ‘பகுபலி’ ஆகிய இரு வரலாற்று படங்களில் நடித்து வருகிறார். ருத்ரமாதேவியில் மகாராணி கேரக்டரில் வருகிறார்.
பகுபலி படத்தில் வாள் சண்டை, கத்தி சண்டை போட்டு அதிரடி ஆக்ஷனில் நடிக்கிறார்.
பகுபலி ஜைன துறவியை குறிக்கும் பெயர் என்றும் அமைதியே உருவான அந்த துறவியின் பெயரில் எடுக்கும் படத்தில் வாள் சண்டை போன்ற வன்முறை காட்சிகளை வைப்பது கண்டிக்கத்தக்கது என்று ஜைன துறவிகள் கூறியுள்ளனர்.
மேலும் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகிறார்கள், வக்கீல் நோட்டீசும் அனுப்பியுள்ளார்கள். இதனால் படத்தின் தலைப்பை மாற்றலாமா என்ற யோசனை நடக்கிறதாம்.