கடந்த 2005 ஆம் ஆண்டு பி ஸ்டூடியோ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய இயக்குநர் பாலா, நடிகர் சூர்யா நடித்த மாயாவி திரைப்படத்தை இணைந்து தயாரித்தார். அதன்பின் 2013 ஆம் ஆண்டு பரதேசி படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் தயாரித்து வெளியிட்டார்.
இந்நிலையில் அவர் வருடத்திற்கு இரண்டு படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளார். ஒநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை பார்த்து அசந்து போன பாலா மிஸ்கினுக்கு தன்னுடைய தயாரிப்பில் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார். இந்நிலையில் பாலாவும், மிஸ்கினும் இணைந்து படத்தை உருவாக்கவுள்ளதால் இப்போதே அந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.