இலங்கை- இந்திய மீனவர்களுக்கு இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் மார்ச் 13ம் திகதியன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.
இதனை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையின் சிறைகளில் உள்ள 121 இந்திய மீனவர்களை விரைவில் விடுதலை செய்ய இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் கோரியுள்ளார்.
சென்னையில் கடந்த ஜனவரி 27 ஆம் ஆண்டு இடம்பெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்ற இந்திய மீனவர்கள் குழுவே கொழும்பு பேச்சுவார்த்தையிலும் பங்கேற்பர் என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் தொடர்ந்தும் இந்திய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக ஜெயலலிதா இன்று இந்திய வெளியுறவு செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.