இலங்கை இராணுவத்திற்கு இந்திய இராணுவம் தொடர்ந்து பயிற்சி அளிக்குமென கோத்தபாய ராஜபக்சவிடம் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் உறுதியளித்துள்ளார்.
டெல்லியில் இன்று இடம்பெற்ற கடல் வழி பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே சிவ்சங்கர் மேனன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடல்வழி பாதுகாப்பு தொடர்பில் இந்தியா, இலங்கை, மாலைதீவு ஆகிய 3 நாடுகள் இடையே இம்மாநாடு இடம்பெற்றது.
இம்மாநாட்டில் கலந்து கொண்ட பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ச, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனை சந்தித்து கலந்துரையாடியபோது, இந்த உறுதி மொழியினை அவர் வழங்கியுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழன் கேரளாவிடம் இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!
மலையாளதான்களை தமிழர்கள் விடயத்தில் சம்பந்தப்படுத்தவே கூடாது. நாம் தான் திராவிடர்கள் என்று கூறிக்கொண்டிரிக்கிறோம். கன்னடதான்களும்,தெலுங்கன்களும் மலையாளத்தான்களும் இதனை தங்களுக்கு சாதகமாக்கி பலன் அடைகின்றனர்–ஆனால் தமிழர்களை கேரளா,கன்னடா ஆந்த்ரா ஆகிய மாநிலங்களில் கேவலமாக நடத்துகின்றனர். என்ன மடத்தனம் நம்மவர்களுக்கு?
ஆமாம், தெரியாமல்தான் கேட்கிறேன். புலிகள் ஒழிக்கப்பட்டு விட்டனர். இலங்கை எந்தநாட்டுடன் போர்புரிய அந்தநாட்டு இராணுவத்துக்கு இந்தியாவின் தொடர் உதவி வரிந்து கட்டிக்கொண்டு .??!! இலங்கை பாகிஸ்தானுடனும் பங்களாதேசுடனும் போர் புரியவா..?! அல்லது சீனாக்காரன் வந்து இந்தியாவை நல்லா மொத்து2 என மொத்தும்போது, இந்தியாவுக்கு உதவியாக சீனாவுடன் இலங்கை போர் புரியவா..?! உங்கள் நாட்டிலே பசி, பஞ்சம், பட்டினி. குப்பைக் கூளங்கள் ஏராளம். அதனைக் கவனிக்காம, உங்க ‘ஓட்டைத்’ தளவாடங்களுடன் ஒப்புக்கு உருப்படியில்லாத, தேவையற்ற இராணுவப்பயிற்சி..!!