நடிகர் பாலாஜி மரணம்!

balaji_001சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை கொமடி நடிகர் பாலாஜி இன்று காலை திடீர் மரணம் அடைந்தார்.

சின்னத்திரையில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலாஜி. இவரை லொள்ளு சபா பாலாஜி என்று அழைத்தனர்.

மேலும் சூப்பர் டென் நிகழ்ச்சியிலும் வந்தார். கொமடி நடிகர் சந்தானத்தை தொலைக்காட்சியில் அறிமுகப்படுத்திய இவர். சிலம்பாட்டம், திண்டுக்கல் சாராதி உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும் சிவா நடித்த தில்லு முல்லு படத்துக்கு கொமடி வசனம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் அனகாபுத்தூரில் குடும்பத்துடன் வசித்து வந்த இவருக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது.

இதற்காக சிகிச்சை பெற்று வந்தார், இன்று அதிகாலை இவரது உடல் நிலை மோசமானதால் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றிகாலை 8 மணிக்கு மரணம் அடைந்தார். பாலாஜிக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.