ராகுலுக்கு செயலாற்றல், படைப்பாற்றல் இல்லையாம்! சொல்கிறது கருத்துக்கணிப்பு

rahul-Gandhi_002இளைஞர்களின் நாயகனாக காங்கிரசால் உருவகப்படுத்தப்பட்டு வரும் ராகுல் காந்தியை, மோடி மற்றும் கெஜ்ரிவால் தோற்கடித்துள்ளனர்.

இங்கிலாந்தின் பிரபல இணையதளம் ஒன்று, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது.

மூன்று முக்கிய அரசியல் தலைவர்களின் ஆளுமைத் தன்மையின் அடிப்படையில் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

அதில் ’லட்சியம்’, ’சமூக உறவு’ மற்றும் ’அறிவுத்திறன்’ ஆகிய மூன்று பெரும் பிரிவுகளின் கீழ் 23 வகையான பண்புகளின் அடிப்படையில் மக்கள் வாக்களித்துள்ளனர்.

இதுவரை நடந்த கருத்துக்கணிப்பில் ராகுல் காந்தியைக் குறைந்த செயலாற்றல் மற்றும் குறைந்த படைப்பாற்றல் உள்ளவர் என்று மக்கள் வாக்களித்துள்ளனர்.

மற்ற இருவர்களுடன் ஒப்பிடுகையில் பாஜகவின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி அதிக செயலாற்றல் மிக்கவர் என்றும், அதிக தொலைநோக்கு பார்வையாளராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அதேநேரம் அதிக சுயநலமிக்கவராகவும், குறைந்த கொள்கையுடன் செயல்படுபவராகவும் திகழ்வதாக மக்கள் வாக்களித்துள்ளனர்.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சித்தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால் கொள்கையுடன் செயல்படுகிறார் என்றும் படைப்புத்திறன் அதிகம் உள்ளவர் எனவும் வாக்களித்துள்ளனர்.

இந்த மூவரில் குறைந்த தொலைநோக்கு பார்வை உள்ளவராக திகழும் கெஜ்ரிவால், தன்னுடைய திட்டங்களை நாட்டு மக்களிடம் விரிவாக எடுத்துரைக்க வேண்டும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றது.

TAGS: