முடியும் தருவாயில் தேர்தல் வன்முறை; மே.வங்கத்தில் மோதல்: துப்பாக்கிச்சூடு

kolkataகோல்கட்டா: பார்லி., தேர்தல் இன்றுடன் 9வது கட்ட ஓட்டுப்பதிவு முடிவடைகிறது. இது வரை பெரிய அளவில் வன்முறை ஏதும் இல்லாமல் 8 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. ஆனால் இன்று இறுதிக்கட்ட தேர்தலில் மேற்குவங்கத்தில் பெரும் மோதல் வெடித்தது.

ஆளும் திரிணாமுல் காங்., இடதுசாரி கட்சியினர் இரு பிரிவுகளாக மோதிக்கொண்டனர். வன்முறையை தடுக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 20 பேர் காயமுற்றுள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் 4பேர் காயமுற்றதாகவும், பரசாத் பகுதியில் தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.

வாரணாசியில் மோதல் ஏற்படலாம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

TAGS: