ராஜபக்சேவின் அன்பான அழைப்பு: இலங்கை பறக்கிறார் மோடி

mahinda_modi_002பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை வருமாறு ராஜபக்சே விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

யூலை மாதத்திற்கு பிறகு இலங்கைக்கு பயணம் செய்வது தொடர்பாக முடிவு செய்யப்படும் என்று ராஜபக்சேவிடம் மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி வந்த இலங்கை அதிபர் ராஜபக்சே, பிரதமர் மோடியை ஐதராபாத் இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார்.

அப்போது இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்சனை, தமிழக விவகாரம் குறித்து இருவரும் விரிவாக விவாதித்தனர்.

மேலும், ஒருங்கிணைந்த இலங்கையில் தமிழர்கள் கண்ணியத்துடன் வாழவும், தமிழர்களுக்கு சம உரிமை, நீதி மற்றும் அமைதி கிடைக்கவும் நல்லிணக்க நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று இலங்கை அதிபரிடம் மோடி வலியுறுத்தினார்.

இதனையடுத்து, இலங்கையில் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு, மீள் குடியேற்றம், மறு கட்டுமானம் உள்ளிட்ட திட்டங்களை மோடியிடம் ராஜபக்சே விளக்கியதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

மேலும், இலங்கை தமிழர் நலனில் இந்தியா மிகவும் அக்கறை கொண்டுள்ளதாக மோடி அப்போது தெரிவித்துள்ளார்.

TAGS: