வேதனைகளை தாங்கி வந்துள்ள தமிழக மீனவர்கள்

tamilnadu_fishermen_001இலங்கை கடற்படையினரால் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 85 பேரில் 32 பேர் நேற்று இராமேஸ்வரம் திரும்பியபோது வேதனைகளையும் சோகக்கதைகளையும் தாங்கி வந்ததாக தெ ஹிந்து தெரிவித்துள்ளது.

மண்டபம் பிரதேசத்துக்கு அவர்கள் வந்தபோது தாம் இலங்கை கடற்படையினரிடம் வாழ்க்கையை தொலைத்து விட்டு வந்துள்ளதாக தெரிவித்தனர்.

இலங்கை கடற்படையினர் தமது படகுகளை தாக்கி சேதப்படுத்தியதுடன் அவற்றை மூழ்கடித்ததாகவும் தமிழக மீனவர்கள் குறிப்பிட்டனர்.

அத்துடன் ஞாயிற்றுக்கிழமையன்று அதிகாலை தாம் கைதுசெய்யப்பட்டபோது இலங்கை கடற்படையினர் தம்மை சித்திரவதை செய்ததாகவும் தமிழக மீனவர்கள் குற்றம் சுமத்தினர்.

இந்த மீனவர்கள், புதுக்கோட்டை ஜெகதாபட்டிணத்தை சேர்ந்தவர்களாவர்.

தாம் விடுதலை செய்யப்பட்டபோதும் தமது வாழ்வாதாரம் இழக்கப்பட்டுள்ளது. எனவே தமது விடுதலையில் தாம் மகிழ்ச்சியடையவில்லை என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை 85 மீனவர்களில் ஏனையோர் இன்று இந்திய கடற்படையினரிடம் கையளிக்கப்படுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

TAGS: