நாட்டை காப்பாற்ற மோடியின் சிக்கனம்

அமைச்சர்கள் யாரும் புதிய கார்களை வாங்க கூடாது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

 

அண்மையில் மத்திய அரசின் கஜானா காலியாக இருப்பதாகவும் , அதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசே காரணம் என மோடி குற்றம் சாட்டியிருந்தார்.எனவே நாட்டின் நிதி நிலைமையை சரி கட்ட சில கசப்பான முடிவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் கூறியிருந்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, ரயில் கட்டணம், சக்கரை மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்ட அனைத்தும் விலையுயருந்து நாட்டின் மக்களை கசப்பான அனுபவம் பெறச் செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மக்களின் நிலை இவ்வாறு உள்ளதால், இனி அமைச்சர்களும் புது கார் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது என மோடி கூறியதாக அவரின் அலுவலக வட்டாரங்கள் கூறியுள்ளன.

மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமாய் செலவளித்தால் அதற்கு அமைச்சர்கள், பிரதமர் அலுவலகத்திலிருந்து முன்கூட்டியே ஒப்புதல் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

TAGS: