பா.ஜ., புதுமுக எம்.பிக்களுக்கு அறிமுக வகுப்பு

bjpnewmpsபுதுடில்லி: பா.ஜ.,சார்பில் போட்டியிட்டு தேர்வான புதுமுக எம்.பிக்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று துவங்குகிறது.
நடந்து முடிந்த 16-வது லோக்சபா தேர்தலில் பா.ஜ.,சார்பில் மொத்தமாக 282 பேர் எம்.பிக்களாக தேர்வாகினர்.

இதில் சிலர் நான்கு முதல் எட்டுக்கும் மேற்பட்ட தடைவை பார்லி.,, உறுப்பினர்களாக வலம் வருகின்றனர். பிரதமர் நரேந்திரமோடி உட்பட 161 பேர் பார்லிக்கு புதுமுக எம்.பிக்களாக அறிமுகம் ஆகின்றனர்.

இவர்கள் அனைவரும் தங்களிடம் கூச்ச சுபாவத்தை நீக்கிவிட்டு பார்லி., நடவடிக்கைகளை குறிப்பாக எதி்ர்கட்சிகளின் கண்டனத்தை எதிர்கொள்வது என்பது குறித்த அறிமுக வகுப்பு நடத்தப்பட உளளது. குறிப்பாக பார்லியில் செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை எவை எவை என பட்டியலிடப்பட்டு எம்.பிக்களுக்கு குறிப்பேடு வழங்கப்பட உள்ளது.

இன்று முதல் இரண்டு நாட்கள் நடைபெற உள்ள அறிமுக வகுப்பு டில்லி-அரியானா மாநில எல்லை பகுதியி்ல்அமைந்துள்ள சூரஜ்குண்டுவில் உள்ள ஓட்டலில் நடைபெற உள்ளது.

வரும் 7-ம் தேதி பட்ஜெட் கூட்டதொடர் துவங்க உள்ள நிலையில் வாக்காளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது குறித்து வெங்கயைநாயுடுபயிற்சி அளி்க்க உள்ளார். உறுப்பினர்களி்ன் கடமைகைள், தங்களின் உரிமைகள் குறித்து நிதியமைச்சரும் , பாதுகாப்புத்துறை அமைச்சருமான அருண்ஜெட்லி பயிற்சி நடத்துகிறார். மத்திய மின்துறை அமைச்சர் பையூஸ் கோயல் சமூக ஊடகங்களை பொறுப்புடன் கையாள்வது குறித்தும், மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உட்பட பல்வேறு தலைவர்களும் பயிற்சி அளிக்க உள்ளனர்.

இறுதிகட்ட பயிற்சியை கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி வழங்க உள்ளதாக பா.ஜ.,வட்டாரங்கள் தெரிவித்தன. பயிற்சியின் இறுதி வகுப்பு நாளை மாலை 4 மணியுடன் முடிவடைகிறது.

TAGS: