விஜயகாந்த் தனது இளைய மகன் சண்முகப் பாண்டியனை ‘சகாப்தம்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகப்படுத்தவுள்ளார்.
இந்தப் படத்தை புதுமுக இயக்குனர் சந்தோஷ்குமார் ராஜன் இயக்கி வந்தார். இவர், வல்லரசு படத்தின் இயக்குனர் மகாராஜன் உள்பட பல முன்னணி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். சமீபத்தில் தொடங்கிய ‘சகாப்தம்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இயக்குனர் சந்தோஷ்குமார் ராஜன் அப்படத்திலிருந்து திடீரென விலகிவிட்டதாக கூறப்படுகிறது. காரணம் படத்தின் அனைத்து விஷயங்களிலும் விஜயகாந்த் குடும்பத்தினரின் தலையீடு இருந்து வந்ததாம். அதிலும் குறிப்பாக இயக்குனர் விஷயத்தில் விஜயகாந்த்தின் தலையீடு அதிகமாகவே இருந்ததாம். ஒரு சமயத்தில் தானே படத்தை இயக்கி வந்திருக்கிறார் விஜயகாந்த்.
இதை பொறுத்து பொறுத்து பார்த்த சந்தோஷ்குமார் ராஜன் ஒரு கட்டத்தில் ஆளவிட்டால் போதுமடா சாமி என்று கிளம்பியே போய்விட்டாராம். அப்புறம் தற்போது இயக்குனர் பொறுப்பு சுரேந்தர் என்பவருக்கு வழங்கப்பட்டிருக்கிறதாம். அவரும் நிலைப்பாரா அல்லது விஜயகாந்த்தின் அட்டகாசம் தாங்க முடியாமல் சென்றுவிடுவாரா என்பதை பொறுத்திருந்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அட கிறுக்கு பய புள்ள
விஷ்கிகாந்த் எப்பவுமே போதைலதானாம் irupaapila
விஜயகாந்த் ரொம்ப பீல் ஆயீட்டாப்புல , அதனாலே ஒரு புல் சொல்லி குடிசிட்டாப்புள்ள , அதனால இயக்குனர் ஓடிட்டாப்புள்ள…