பாதுகாப்புத் துறை: அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதில் எச்சரிக்கை தேவை: சரத் பவார்

முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும்போது மத்திய அரசு எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் யாதவ் கூறியுள்ளார்.

முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரான அவர் மும்பையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறுகையில், “”உள்கட்டமைப்புத்துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கு எங்களது ஆதரவு எப்போதுமே உண்டு.

எனினும், முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புத்துறை என வரும்போது, அன்னிய முதலீடுகள் விஷயத்தை அதிக விவேகத்துடன் கையாள வேண்டும்.

முதலீடு செய்ய முன்வரும் நிறுவனங்களை எச்சரிக்கையுடன் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஒருவேளை நமது அண்டை நாடுகளில் ஒன்றைச் சேர்ந்த நிறுவனமொன்று, நமது பாதுகாப்புத்துறையில் முதலீடு செய்ய முன்வந்தால், அப்போது அதுகுறித்து யோசிக்க வேண்டும்.

TAGS: