முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மகள் தமன்சிங், மன்மோகன், குர்சரண் ஆகியோரது வாழ்வு குறித்து புத்தகம் எழுதியுள்ளார். கடந்த 10 ஆண்டு காலம் பிரதமராக இருந்த காலத்தை இவர் இந்த புத்தகத்தில் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், ஆங்கில செய்தி சேனல் அப்போது அவர் கூறியதாவது:-
எனது தந்தை எல்லாவற்றையும் எங்களிடம் பகிர மாட்டார். சோனியாவை நான் ஒரு முறை சந்தித்திருக்கிறேன் அவர் மிக மென்மையானவர். திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மான்டேக்சிங்கும், எனது தந்தையும் மிக நெருக்கமான புரிந்தவர்களாக இருந்தனர்.
எனது தந்தை மிக நேர்மையானவர். கடந்த 10 ஆண்டு கால ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் எனது தந்தைக்கு ஏற்பட்ட அவப்பெயரால் நான் மிகவும் வருத்தப்பட்டேன். எனது தந்தை கடுமையாக உழைத்தார். ஆனால் அவரது கடும் உழைப்பு போற்றப்படவில்லை என நினைத்த போது துயரப்பட்டேன். பொது கருத்து என்பது சிறிய காலம் மட்டுமே இருக்கும். இது நொடிக்கு, நொடி மாற்றம் பெறும்.
2வது முறை பிரதமராக தேர்வு செய்யப்பட்டது பெரும் சவாலான விஷயமாகவும், இதனை அவருக்கு கிடைத்த கவுரவமாகவும் தந்தை எடுத்து கொண்டார்.
கடந்த 10 ஆண்டுகாலமாக எனது தந்தை கடுமையாக உழைத்துள்ளார். ஆனால், அவரது திறமை குறித்து அதிருப்தியான கருத்து பரவி வருவது கவலை அளிக்கிறது. அவரது சாதனைகள் பாராட்டப்படாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது. எனது தந்தை நிதி மந்திரியாக இருந்த போது ஊடகங்களுடன் பேசுவதை மிகவும் விரும்பினார். ஆனால், மீடியாக்கள் தான் அவரது மனநிலையை மாற்றிவிட்டன.
இப்போதெல்லாம் எல்லோரும் புத்தகம் எழுதுகிறார்கள். அப்படி இருக்கும் போது எனது தந்தை ஏன் எழுதக்கூடாது. அவர் சுயசரிதை எழுத வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் நிச்சயமாக எழுதுவாரா என்று எனக்கு தெரியாது. ஆனால், சுயசரிதை எழுதும் அளவிற்கு என் தந்தைக்கு அறிவாற்றலும், திறமையும், அனுபவமும் நிறையவே உள்ளது. அவர் அவ்வாறு எழுதினால் அது பலருக்கு சேவையாக அமையும். இவ்வாறு தமன்சிங் கூறினார்.
மன்மோகன் சிங் எதிலும் தனது அக்கறையை காண்பிக்கவில்லை.அதிலும் மிகவும் பின் விளைவுகளை எண்ணாமல் பல தவறுகளை செய்து அனாவசியமாக மடத்தனமான விளைவுகள் ஏற்பட காரணமாக இருந்து ஊழல் வியாபிக்க காரணமாக இருந்தார்.
கடுமையாக உழைத்தார் என்பது உண்மை. ஆனால் சோனியாவிடமும், ராகுலிடமும் முகதை கடுமையாக காட்டவில்லை !!!.அதுதான் குறை.