கேரளாவில் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய ஜனநாய முன்னணி ஆட்சி நடக்கிறது.
அம்மாநில முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உம்மன்சாண்டி பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் கேரள முதல்வர் அறிவித்த மது விலக்கு கொள்கை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இந்த உத்தரவு படி அடுத்த 10 ஆண்டுகளுக்கு மது விற்பனை செய்ய மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வருடந்தோறும் 10 சதவீத அரசு மதுபான கடைகள் மூடப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாறி எந்த அமைச்சர் கோலாலம்பூர் லிட்டல் இந்தியாவில் உள்ள மது கடைகளை மூட போகிறார் .
மதுபான கடைகள் மூடப்பட மாட்டா. அரசுக்கு அதிக வருமானம் கொடுக்கும் இதை ஏன் அவர்கள் மூடவேண்டும்? அதை மூடினால் இந்தியர்கள் மெல்ல்2 சற்று முன்னேறிவிடுவார்கள் என்பது அரசுக்குத் தெரியாதா..?! தெரிந்தப் பிறகும் அந்த “மூடும்” தவறை செய்வார்களா?! ஆளும் வர்க்கம் அதிகம் குடிப்பதாக இருந்தால் அடுத்தவாரமே மூடல்தான். மீறினால், கொடுப்பவருக்கும் குடிப்பவருக்கும் கம்பி எண்ணல்.
நம் நாட்டில் சீனா மருந்து கடையில் விற்கும் மதுபானங்கள் அனைத்தும் விற்க தடை செய்ய வேண்டும் இதை நாம் பிரதமர் செய்வாரா……………?