மிஸ்கின் இயக்கத்தில் வெற்றிகரமாக ஓடிய படம் ‘அஞ்சாதே’. இதில் கதாநாயகனாக நரேனும் இவருக்கு ஜோடியாக வரலட்சுமியும் நடித்திருந்தார்கள். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரசன்னா, அஜ்மல், பாண்டியராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். சுந்தர் சி பாபு இசையமைத்திருந்த இப்படத்திற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவை செய்திருந்தார்.
2008-ம் ஆண்டு வெளிவந்த இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வித்தியாசமான கதையும், திரைக்கதையும் கொண்டு கிரைம் திரில்லராக உருவாக்கப்பட்ட இப்படம் வசூலிலும் சாதனை படைத்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளார் மிஸ்கின். இப்படத்தை விறுவிறுப்பான துப்பறியும் படமாக உருவாக்க உள்ளார்.
தற்போது மிஸ்கின், பாலா தயாரிக்கும் ‘பிசாசு’ படத்தை இயக்கி வருகிறார். இறுதி கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தை நவம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.