ரஜினியை தமிழக முதல்வராக்குவதற்கு மோடி தீவிரம்!

11-rajini11-300நடிகர் ரஜினியை பாரதீன ஜனதா கட்சிக்கு கொண்;டு வருவதில் அந்தக் கட்சியின் மேலிடத் தலைவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

ஹைதரபாத்தில் தங்கியிருக்கும் ரஜினியிடம் பாஜக தலைவர் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளுடன் இரகசிய கருத்து கேட்பு நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும். இதேவேளை அவர் பாஜகவில் சேர்ந்தால் மிகுந்த மகிழ்ச்சி என்று அந்தக் கட்சியின் நிர்வாகிகள் வெளிப்படையாக அழைப்பு விடுத்து வருகின்றனர்.

சமீபத்தில் கொலு விழாவை காரணமாக வைத்து ரஜினி வீட்டுக்கு சென்ற பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ரஜினியின் மனைவி லதாவுடன் சுமார் ஒரு மணி நேரம் அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசினார்.

இதைத் தொடர்ந்து ரஜினி பாஜகவில் சேருவாரா? அல்லது தனிக்கட்சி தொடங்குவாரா? என்பது குறித்து பலத்த விவாதங்கள் நடந்து வருகின்றன.

இந்தநிலையில் தற்போது லிங்கா’ படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் இருக்கும் ரஜினியுடன் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா போனில் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்த விடயம் குறித்து ஏற்கெனவே அமித்ஷா 3 முறை ரஜினிகாந்திடம் பேசியிருப்பதாகவும் தகவலகள் கூறுகின்றன

எனினும் ரஜினி, தாம் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்லவில்லை. காலம் கனியட்டும் என்று மட்டுமே சொல்லியிருக்கிறார்.

குறிப்பாக,  பிரதமர் மோடி இதில் ஆர்வமாக இருக்கிறார்.

எப்படியும் நீங்களே முதலமைச்சர் வேட்பாளர் என்று அமித்ஷா ரஜினியிடம் கூறியுள்ளார்

இதனையடுத்து ரஜினியும்,  படப் பிடிப்பு முடியட்டும் உறுதியான பதில் சொல்கிறேன் என்று கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: