பெண் குழந்தைகளை பாதுகாக்க ஆலோசனை: இணையதளத்தில் பகிர்ந்து கொள்ள பிரதமர் அழைப்பு

பெண் குழந்தைகளைப் பாதுகாக்க ஆலோசனைகளைத் தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

பெண் குழந்தைகளுக்கான சர்வதேச தினம் அக்டோபர் 11-ஆம் தேதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி இந்தியாவிலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடத்தப்பட்டன. இந்த நிகழ்வையொட்டி பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

“நம் நாட்டில் பெண் குழந்தைகளுக்கு சமவாய்ப்பையும் பாலின பேதமற்ற நிலையையும் உருவாக்குவோம் என அனைவரும் உறுதியேற்போம். சர்வதேசப் பெண் குழந்தைகள் நாளில் நமது பெண் குழந்தைகளின் சாதனைகளைக் கொண்டாடுகிறோம். படிப்பறை முதல் விளையாட்டுத் துறை வரை அவர்கள் பரிணமிக்கின்றனர்.

அவர்களுக்கு சமவாய்ப்பை ஏற்படுத்தக் கூடிய சூழலை அமைப்போம். பாலின அடிப்படையில் பிரிவினை ஏற்படுமா என்ற கேள்வியே எழாது.

பெண் சிசுக் கொலையை அறவே நாம் ஒழிக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசின் “ம்ஹ்ஞ்ர்ஸ்.ண்ய்’ இணையதளத்தில் பொதுமக்கள் ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பெண் சிசுக் கொலை நிகழ்வுகள் மிகப் பெரிய அவமானம் மட்டுமன்றி மிகவும் கவலை தரக் கூடியதாகும். இக்கொடூரத்தை ஒழிக்க நாம் இணைந்து பாடுபடுவோம். பெண் குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்க அரசு இணையதளத்தில் ட்ற்ற்ல்://ம்ஹ்ஞ்ர்ஸ்.ண்ய்/ஞ்ழ்ர்ன்ல்ஜண்ய்ச்ர்/க்ஷங்ற்ண்-க்ஷஹஸ்ரீட்ஹர்-க்ஷங்ற்ண்-ல்ஹக்ட்ஹர் என்ற பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதில் உங்கள் விவரத்தைப் பதிவு செய்து கருத்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கவும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

TAGS: