மலையாளத்தில் மோகன்லால் நடித்து வெளிவந்த த்ரிஷியம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தின் சூட்டிங்கில் தீவிரமாக இறங்கி உள்ளார் கமல்.
பாபநாசம் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புக்கள் நெல்லை மாவட்டத்தின் பல இடங்களில் படமாக்கப்பட்டது. இந்நிலையில் சிறிது நாட்கள் இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் இப்படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. இதில், முதல்கட்ட சூட்டிங்கில் இருந்ததை விட தற்போது இளமையான கெட் அப்பில் உள்ளாராம் கமல்.
கமலின் இந்த இளமை தோற்றம், வெற்றிவிழா மற்றும் சிங்காரவேலன் பட கமலை நினைவுபடுத்தும் வகையில் உள்ளதாம். இந்த விஷயம் கமல் ரசிகர்களுக்கு பெரிய சந்தோஷத்தை கொடுக்கும் என்றே கூறலாம்.
அத்துடன் உத்தமவில்லன் படத்தில் மீசை இல்லாமல் நடித்த கமல், அந்த படத்தை முடித்த கையோடு பாபநாசம் படத்தின் வேலைகளில் இறங்கி விட்டதால், இந்த படத்தில் வேட்டி சட்டை அணிந்த கிராமத்துக்காரராக வரும் கமல் மீசை வைத்திருக்க வேண்டும் என டைரக்டர் சொல்லி விட்டாராம்.
அதனால் முதல்கட்ட சூட்டிங்கின் போது ஒட்டு மீசை வைத்து நடித்த கமல், இந்த சிறிது நாட்கள் இடைவெளியில் மீண்டும் ஒரிஜினல் மீசையுடன் வந்து நடித்துக் கொண்டிருக்கிறாராம்.