எல்லையில் மீண்டும் துவங்கியது வர்த்தகம்

india-pakistan-flag_0ஸ்ரீநகர்: ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் எல்லைப்பகுதியில் இந்தியா-பாக்., இடையேயான வர்த்தகம் மீ்ண்டும் துவங்கியது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தின் வழியாக இந்தியா-பாக்.,. இடையே வர்த்தக உறவு நடைபெற்று வந்தது. இதன் மூலம் இரு நாட்டு வணிகர்கள் பயன்பெற்றதுடன் பொதுமக்களும் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர்.

கடந்த சில நாட்களாக எல்லைப்புற பகுதியை குறிவைத்து பாக்., படைகள் தாக்குதல் நடத்தி வந்தது. இத்தாக்குதலில் வர்த்தகம் நடைபெற்று வந்த பூஞ்ச் பகுதியும் உள்ளடங்கியது. இதன் காரணமாக வணிகம் நடைபெறாமல் வர்த்தகர்கள் உள்பட பொதுமக்கள்பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது பாகிஸ்தானின் தாக்குதல் குறைந்துள்ளதையடுத்து மூன்று வார கால இடைவெளிக்கு பின்னர் மீண்டும் வர்த்தகம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.
இது குறித்து இந்திய அதிகாரிகள் கூறியதாவது: பூஞ்ச் பகுதியி்ல் இந்திய எல்லைப்பகுதியில் இருந்து மிளகாய் மற்றும் சீரகம் உட்பட சுமார் 5 கோடியே 49லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது.

அதே போல் பாகிஸ்தான் பகுதியில் இருந்து மாதுளை மற்றும் உலர் பேரீச்சம் பழம் உட்பட சுமார் 6 கோடியே 26லட்சம் மதிப்பிலான பல்வேறு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததுள்ளனர்.

TAGS: