நடிகர் ரஜினியை, திடீரென நேற்று காலை, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சந்தித்துப் பேசினார். இது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதோடு, ரஜினி மீது கடுமையான விமர்சனங்களையும் கிளப்பி இருக்கிறது.
‘லிங்கா’ படப்பிடிப்பு தொடர்பாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக, பெங்களூரு, மைசூரு என முகாமிட்டிருந்த நடிகர் ரஜினி, கடந்த 10 நாட்களுக்கு முன், சென்னை திரும்பினார்.
அதன்பின், தொடர்ச்சியாக சென்னையில் தங்கியிருந்து அவர், ‘லிங்கா’ பட ரிலீஸ் தொடர்பாக பலரையும் சந்தித்து பேசி, அவர்களிடம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
ஆர்வமாக பேசி…: இதற்கிடையில் அரசியல்வாதிகள் பலரும் தொடர்ந்து அவரை சந்தித்து வருகின்றனர். காங்கிரஸ், பா.ஜ., – தி.மு.க., என பல தரப்பிலும் சந்திப்புகள் நடக்கின்றன.
அனைவரும் அரசியல் தொடர்பாக பேச, ரஜினியும் அவர்களிடம் ஆர்வமாக பேசி, அனுப்புகிறார். ஆனால், யாரிடமும் அவர் அரசியலில் ஈடுபடுவது குறித்து, எந்த முடிவையும் சொல்லவில்லை. இதனால், அவர் மீது பல கட்சியினரும் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து, அரசியல் வட்டாரங்களில் கூறியதாவது: நடிகர் ரஜினி, கடந்த ?? ஆண்டுகளுக்கும் மேலாக இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறார். தற்போது ‘லிங்கா’ படம்
ரிலீசாகப் போகிறது என்றதும், ரஜினி அரசியலுக்கு வரப் போவதாக செய்திகள் கசிய விடப்படுகின்றன.
நட்பு அடிப்படையில்…: கடந்த ஓராண்டுக்கு முன், பிரதமர் நரேந்திர மோடி, ரஜினியை பா.ஜ., பக்கம் கொண்டு வர வேண்டும் என, விருப்பப்பட்டார். அந்த நோக்கத்தில் தான், ரஜினியை வீடு தேடிச் சென்று பார்த்தார். ஆனால், ரஜினி, அரசியலுக்கு வர, பிடிகொடுக்கவில்லை என்றதும், நட்பு அடிப்படையில் அவரை சென்று பார்த்ததாக சொல்லிவிட்டு, அமைதியாகி
விட்டார். அதன்பின் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., பெரு வெற்றி பெற்றதும், இது நாள் வரையில், ரஜினி பற்றி மோடி எந்த அக்கறையும் கொள்ளவில்லை. ஆனால், தமிழகத்தில்,
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கைதானதும் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை நிரப்ப, பா.ஜ.,வுக்கு ரஜினியை அழைத்து வரவேண்டும் என, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தர
ராஜன் தன்னிச்சையாக விரும்பினார். ரஜினி, வழக்கம் போல பிடி கொடுக்கவில்லை.
முதல் ஆளாக கடிதம் : ஆனால், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, சென்னைக்கு வந்த ஜெயலலிதாவை வரவேற்றும், வாழ்த்து சொல்லியும், முதல் ஆளாக கடிதம் அனுப்பினார் ரஜினி.
இதனால், ரஜினி மீது, மொத்த பா.ஜ., தரப்பினரும் அப்செட் ஆனார்கள். பா.ஜ.,வுக்கு தலையையும், அ.தி.மு.க.,வுக்கு வாலையும் காட்டிக் கொண்டிருக்கும் ரஜினியிடம், பா.ஜ., தரப்பு உஷாராக இருக்க வேண்டும் என, ஒதுங்கினர். இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும்போதே, காங்கிரசின் கராத்தே தியாகராஜனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லும் சாக்கில், அவரிடமும் பேசி, தான் காங்கிரசுக்கும் ஆதரவாளன் தான் என காட்டினார் ரஜினி. இந்நிலையில், நேற்று காலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை வீட்டுக்கு வரவழைத்து, பேசினார் ரஜினி.
புராணம் பாடுவதில்லை : ப.சிதம்பரம், இலக்கியத்தை மையமாக வைத்து ஆரம்பித்திருக்கும் ‘எழுத்து அறக்கட்டளை’யின் நிகழ்ச்சிக்கு, ரஜினியை அழைக்கத்தான், கார்த்தி சிதம்பரம் போனார். என்றாலும், இருவரும் வெகுநேரம் அரசியல் பேசியிருக்கின்றனர்.
இதுவும் தமிழக பா.ஜ., தரப்புக்குத் தெரிய வர, அவர்கள் ரஜினியின் நடவடிக்கைகள் மீது கடும் எரிச்சல் அடைந்திருக்கின்றனர். இனி எக்காரணம் கொண்டும் ரஜினி புராணம் பாடுவதில்லை என்ற முடிவுக்கும் வந்திருக்கின்றனர். இவ்வாறு, அந்த வட்டாரங்களில் தெரிவித்தனர்.
சிதம்பரம் ஒரு முழு திருடன் ,கார்த்தி சொல்லவே வேண்டாம் ,இவனுங்க ரெண்டு பெரும் ரஜினியை வைத்து குடம்ப கட்சி நடத்த பாக்குறானுங்க அதான் உண்மை ,ரஜினி அரசியலுக்கு வர மாட்டார் என்பது தான் உண்மை .ஒரு நடிகரை போயி கட்சியிலே இழுத்து நுழைத்து ஆட்சி செய்ய பார்கிராணுங்க என்றால் ,அப்ப அரசியல் வாதி சர்வதேச முட்டாள்கள் தானே ,சொந்த காலில் நிக்க வக்கில்லாத அரசியல்வாதிகள் கூத்தாடிகளை காட்டிலும் மோசமானவர்கள் .சோனியாவுக்கும் ,மோடிக்கும் போம் மாலைதான் தயாரிக்க வேண்டும் போலிருக்கே ?!சொந்த காலில் நிக்க துப்பு இல்லாத மடையுணுங்க இந்த சிதம்பரமும் கார்த்தியும் .ரஜினி அணிந்திருக்கும் செருப்பை கலட்டி தான் சிதம்பரத்தையும் கார்த்தியையும் அடிக்கினும் ,அப்பத்தான் இவனுங்களுக்கு புத்தி வரும் .இதை காரணம் காட்டி லிங்காவை ,பாபாவில் நடந்தது போல் செய்தால் ,அணைத்து பா.ஜ வின் மந்திரிகள் வீட்டிலும் ???????ரஜினியின் பாடல் ஒலிக்கும் ! எப்படி ?? குண்டு ஒன்னு வச்சிருக்கேன் ,வெடி குண்டு ஒன்னு வச்சிருக்கேன் .பா.ஜ வுக்கு முதல் படி எச்சரிக்கை !!!!!
தமிழ் நாட்டை தமிழன் ஆள தமிழன் விட மாட்டன்…கேவலம் ஆட்சியை பிடிக்க …ஒரு நடிகனை அதுவும் கர்நாடகத்தில் இருந்து பிழைக்க வந்த ஒருவனை தேடும் கட்டத்தில் இந்த கட்சிகள் இறங்கி போய் விட்டன கேரளா ..கன்னட …ஆந்திர ஆட்கள் தமிழா நாட்டில் உயர அரச பதவிகளில் இருக்கலாம் ..அனால் மற்ற மாநிலங்களில் பரம்பரை ஆக வாழும் தமிழர்கள் அரச பதவி வகிக்க முடியாது …..
சரியாக சொன்னீர் தம்பி மோகன், காரைக்குடி நகரத்தார் சமுகத்தை சேர்ந்தவர் சிதம்பரம் அதனால்தான் நிதி அமைச்சர்ஆக இருந்தார். ஆனால் தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சியை வளர்க்காமல் தன் குடும்பத்துக்கு சொத்து சேர்பதிலையே கவனமாக இருந்தார். கார்த்திக் சிதம்பரத்துக்கு அரசியல் தெரியாது. அப்பா பெயரில் அரசியல் பண்ணும் கத்துகுட்டி. யார் போய் ரஜினியை பார்த்தாலும் அவர் அரசியலக்கு வரவேமாட்டார். ஆனல்பட்ட சிவாஜியே அரசியலக்கு வந்து நாறிபோனர்.
நன்றாக பார்த்தல் ரஜினி ஒவ்வொரு புது படம் வரும்போதும் இப்படிதான் அரசியல் குழப்பம் பண்ணி சுய விளம்பரம் தேடிகொள்வர். தமிழ்நாடில் அரசியல் கட்சி தலைவர்களும் எலும்பு துண்ட்டுக்கு ரஜினி பின்னால் அலைகிறார்கள். ரஜினி வைப்பர் அவர்களுக்கு பெரிய ஆப்பு. இது எப்படி இருக்கு.
Thipori ,நன்றி உங்கள் பண்பான கருத்துக்கு .ரஜினி அவர்கள் டான் உண்டு தன் குடும்பம் ,தொழில் என்று சிவநீன்னு இருக்கிறார் ,இவனுங்க போயி அவர் பெயரை கெடுக்க பார்க்கிரானுங்க .என்றைக்காவது ரஜினி சொல்லி இருக்கிறாரா நான் அரசியலுக்கு வருவேன் என்று ??? இருக்கிற வேலை வெட்டி இலாத பயல்க அந்த நல்ல மனிதரை நொண்டி பார்க்கிரானுங்க .
ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட ரஜினி அரசியல் எனும் சாக்கடியில் விழமாட்டார். ரஜினி பிரபலமானவர். பெரிய பதவியில் உள்ளவர்கள் தம்மை தன் வீடு தேடி வருவதை அவர் தடுக்கமட்டார். பதிரிகைகரகள்தான் அவர் போய் ரஜினியை பார்த்தார், இவர் போய் ரஜினியை பார்த்தார், ரஜினி அரசியலுக்கு வருவார் என்று தம் பதிரிகையுக்கு சுய விளம்பரம் செய்கிறார்கள். ரஜினி எந்த அரசியல் தலைவர் விட்டுக்கு போயிருக்கிற ? ஒரே தெருவில் வசிப்பதால் தான் ஜெயாவுக்கு அவர் கடிதம் எழுதினரே தவிர இவர் போய் பார்க்கவில்லை ( லதா ரஜினி போய் பார்த்தார் அது வேறு விசயம் & அது மனிதாபிமானம் ) அதனால் ரஜினி Admk வருவரா ?
Thipori வர்களே அப்படி போடுங்க
ரஜினி போனால் என்ன தூதுவர் போனால் என்ன,மீண்டும் சென்னையில் வெண்ணை எடுக்கபோறவன் கன்னடனோ,ஆமாம் ரஜினியை கொண்டு தண்ணீர் பிச்சை கேட்கலாமே,இங்கே மலேசியாவில் வந்தேறி கையில் முத்தம் கொடுத்து முகத்தில் குத்துவாங்குவதுபோல்.அய்யா ரசிகர்கள் நிச்சயம் விரும்புவர் ஆனால்,தமிழரை கட்சியில் சேர்க நேருமே என்று தயங்குகிறான்,ரஜினி வைத்திருக்கும் சொத்தில் ஒரு தமிழனுக்கு கூட வேலை வாய்ப்பு வழங்காதவன் இந்த பெரிய மணிதன்.பல கல்யாண மஹால்,பல கம்பனி,மற்றும்2.ரஜினியை குறை சொல்ல வில்லை காரணம் அவன், அவன் இனத்துக்கு எந்த குறையும் வைக்கவில்லை,நாராயண நாராயண.
யார் பதவிக்கு வந்தாலும் அவர் அவர் இனத்தை ஜாதியை தூக்கிவிட ப்பார்கள், இந்த Kayee பதவிக்கு வந்தாலும் இதுதான் நடக்கும். எந்த அரசியல்வதியவது ( mgr, காமராஜர், அண்ணா, கருணாநிதி, ஜெயா, சாமிவேலு, சம்பத்தன், மகாதிர்) புறங்கையை நக்காமல் இருந்ததுண்டா?