இந்தியா-சீனா-இலங்கை: முக்கோண மோதலில் நடப்பது என்ன?

cina_india_slankaசீன அதிபர் இந்தியாவுக்கு வந்த சமயத்தில் சீனாவின் நீர்மூழ்கி கப்பல் இலங்கைக்கு வந்த செயலை இந்திய பெருங்கடற்பரப்பில் இந்திய கடற்படை ஆதிக்கத்துக்கு எதிரான சவாலாக இந்தியா பார்க்கும் என்கிறார் இந்திய இலங்கை பாதுகாப்பு விவகாரங்களை தொடர்ந்து கவனித்துவரும் இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற உயரதிகாரி கர்ணல். ஹரிஹரன்.

இது குறித்த தனது தீவிர கவலையை இலங்கையிடம் இந்திய அரசு தெரிவித்ததாக சென்னையில் இருந்து வெளியாகும் ”தி ஹிந்து” பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருக்கிறது.

சென்றவாரம் இந்தியா வந்திருந்த இலங்கை ஜனாதிபதியின் சகோதரரும் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தாபய ராஜபக்ஷவிடம் இந்தியாவின் கவலைகள் தெளிவாக தெரிவிக்கப்பட்டதாகவும் ”தி ஹிந்து” செய்தி தெரிவிக்கிறது.

இந்தியாவின் கவலையின் பின்னணி குறித்து இந்திய இலங்கை பாதுகாப்பு விவகாரங்களை தொடர்ந்து கவனித்துவரும் ஓய்வுபெற்ற இந்திய ராணுவ உயரதிகாரி கேனல் ஹரிஹரன் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியின் விரிவான ஒலி வடிவத்தை நேயர்கள் இங்கே கேட்கலாம். -BBC

இலங்கையில் அதிகரிக்கும் சீன இராணுவத்தின் பிரசன்னம்: இந்தியா கவலை

இலங்கையில் அதிகரிக்கும் அதிக இராணுவ பிரசன்னம் குறித்து இந்தியா தமது கவலையை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தரப்பு தகவல்படி, அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்த இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் இது தொடர்பில் இந்தியாவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சார்பில் பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டொவால் ஆகியோர் இந்தியாவின் நிலைப்பாட்டை கோத்தபாயவுக்கு தெளிவுபடுத்தினர்.

கடந்த செம்டெம்பர் மாதம் சீனாவின் நீர்மூழ்கி கப்பல் இலங்கைக்கு சென்றமை, மற்றும் இதற்கு முன்னர் சீனாவின் கடற்படை கப்பல் இலங்கைக்கு சென்றமை குறித்து இந்தியா கவலையை வெளியிட்டுள்ளது.

TAGS: