சல்லிக்காசு கூட விட மாட்டோம் : கறுப்பு பணம் குறித்து மோடி உறுதி

moddபுதுடில்லி: கறுப்பு பணத்தை மீட்க கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி இன்று தனது ரேடியோ உரையில் தெரிவித்தார். வெளிநாட்டில் போடப்பட்டுள்ள கறுப்பு பணம் சல்லிக்காசு கூட விடாமல் திருப்பி கொண்டு வருவோம் என்றும் தெரிவித்தார்.

மாதம்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை ரேடியோ மூலம் மக்களிடம் உரையாற்றுவேன் என்று கூறிய படி 2 வது முறை இன்று பிரதமர் ரேடியோவில் பேசினார். அவரது பேச்சில் இடம் பெற்ற அம்சங்கள் வருமாறு: மக்கள் நமது நாட்டின் வளர்ச்சி குறித்து சிந்திக்க வேண்டும். உடல் நலம் பாதிப்பை ஏழை மக்களை பாதிக்கும். காதியை வாங்குங்கள். இதன் மூலம் காதி விற்பனையை அதிகரிக்க முடியும். கிளீன் இந்தியா திட்டத்தில் நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். மேக் இன் இந்தியா, கிளீன் இந்தியா திட்டம் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்து. தற்போது 125 சதவீதம் காதி விற்பனை அதிகரித்துள்ளது. நம் எண்ணத்தில் மாற்றம் வேண்டும்

தூய்மை ஏழை மக்களை காப்பாற்றும்: குழந்தைகள் குப்பைகளை அகற்றும் எண்ணம் வளர வேண்டும். அவர்கள் தாங்களே தூய்மை பணியில் ஈடுபட வேண்டும். தூய்மை ஏழை மக்களை காப்பாற்றும். நோய் ஏழை மக்களையே முதலில் பாதிக்கிறது. எனவே கிளீன் இந்தியா திட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். கிளீன் இந்தியா பெரும் சவாலான திட்டம் ஆகும். மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மாற்று திறனாளி குழந்தைகள் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படவுள்ளது. இவை இக்குழந்தைகளை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும்.

கறுப்பு பணம் மீட்டு கொண்டு வர எனது தலைமையிலான அரசு கடமைப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளோம். சல்லிக்காசு கூட விடாமல் வெளிநாட்டில் இருந்து கொண்டு வருவோம் . எந்த ஒருபைசா கூட வெளிநாட்டில் இருக்க அனுமதிக்க மாட்டோம். இது கடினமான பாதையில் பயணம் செய்வது போல் ஆகும். இருப்பினும் இறுதியில் நாம் இலக்கை எட்டுவோம். எனது பணியை செவ்வனே செய்ய மக்களாகிய உங்களின் ஆசி எனக்கு தேவைப்படுகிறது. போதை பொருள் பழக்கம் இன்றைய இளைஞர்களை பாதித்துள்ளது. இது கவலை அளிக்கிறது. போதை பொருள் கடத்தல் ஒழிக்க கடும் பாடுபடவேண்டியிருக்கிறது. இது குறித்து அடுத்த முறை ரேடியோ மூலம் மக்களிடம் உரையாற்றவுள்ளேன். இந்நேரத்தில் மக்கள் தங்களின் கருத்துக்களை என்னிடம் தெரிவிக்கலாம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

TAGS: