நீர்மூழ்கிக் கப்பல் குறித்து இந்தியா கலவரமடைய தேவையில்லை: சீனா

china_ship_001நீர்மூழ்கி மற்றும் போர்க்கப்பல் என்பன கொழும்பு துறைமுகத்திற்கு வந்தமை தொடர்பில் இந்திய கலவரமடைய தேவையில்லை என சீனா தெரிவித்துள்ளது.

சீனாவின் நீர்மூழ்கி கப்பல் மற்றும் போர்க்கப்பல்கள் வெளிநாடுகளின் துறைமுகங்களுக்கு நல்லெண்ண பயணங்களை மேற்கொள்வது வழமையான ஒன்று என சீன வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், சீனாவின் நீர்மூழ்கி கப்பல் மற்றும் போர்க்கப்பல் இலங்கை வந்துள்ளமை குறித்து இந்திய ஊடகங்கள் விசேட கவனத்தை செலுத்தியுள்ளன.

சீனாவின் நீர்மூழ்கி மற்றும் போர்க்கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வந்துள்ளமை குறித்து இந்திய அரசாங்கம் கவனத்தில் எடுத்துள்ளதாக இந்திய உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அதேவேளை சீன ஜனாதிபதி இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்ட போது சீனாவின் நீர்மூழ்கி கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் வந்திருந்தமை குறித்தும் இந்திய ஊடகங்கள் ஞாபகப்படுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்தி- இலங்கை துறைமுகத்தில் சீன நீர்மூழ்கி கப்பலை நிறுத்த அனுமதி: இந்தியா கடும் அதிர்ச்சி

TAGS: