சுத்தமான இடத்தை சுத்தப்படுத்திய அரசியல்வாதி

satish

நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் மீதே தவறு என்கிறார் சதிஸ் உபாத்யாய்

 

இந்தியத் தலைநகர் டில்லியின் புறநகர்ப்பகுதியில் உள்ள சுத்தமான இடமொன்றில், குப்பைகளை சுத்தம் செய்வது போல நடிக்கும் அரசியல்வாதி ஒருவரின் படங்கள் சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்துவருகின்றன.

காய்ந்த இலைகுலைகளை வீல்-பரோ (பொருட்களை சுமக்கும் வண்டி) ஒன்றில் பணியாளர் ஒருவர் தள்ளிச் செல்வதையும், கலாசார நிலையம் ஒன்றின் முன்னால் சுத்தமாக இருந்த இடமொன்றில் அவற்றைக் கொண்டுவதையும் படங்கள் காட்டுகின்றன.

இந்தியாவின் ஆளும் பாஜகவின் டில்லி தலைவர் சதிஷ் உபாத்யாய், கமராக்களுக்கு முன்னால் அந்தக் குப்பைகளை பின்னர் கூட்டி சுத்தம் செய்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றில் இதுபற்றி பேசியுள்ள சதிஷ் உபாத்யாய், சுத்தப்படுத்தல் தொடர்பான பிரசார நிகழ்வொன்றுக்கு தான் அழைக்கப்பட்டதாகக் கூறி, அந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் மீது குறைகூறியுள்ளார்.

இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி, பெரும் பிரசார முன்னெடுப்புடன் ‘க்ளீன் இந்தியா’ (சுத்தமான இந்தியா) திட்டத்தை கடந்த மாதம் ஆரம்பித்தார்.

அதனைத் தொடர்ந்து இந்தியாவின் பிரபலங்கள் பலரும் வீதிகளை கூட்டி சுத்தப்படுத்தும் படங்களை வெளியிட்டிருந்தனர். -BBC

TAGS: