பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் நடிகர், நடிகைகள் பங்கேற்று வருகின்றனர். இந்தி நடிகர்கள் பலர் துடைப்பம் ஏந்தி தெருக்களை சுத்தம் செய்த வண்ணம் இருக்கிறார்கள். இதனால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.
நடிகர் கமலஹாசன் தனது பிறந்தநாளில் மாடம்பாக்கம் ஏரியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். ஏராளமான கமல் ரசிகர்களும் இதில் பங்கேற்று ஏரி குப்பைகளை அகற்றினார்கள்.
நடிகை தமன்னாவும், தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்துள்ளார். மும்பை லோகந்த் வாலாவில் ஒரு பகுதியில் குப்பைகளை கொட்டி போட்டு இருந்தனர். இதனால் அங்கு துர்நாற்றம் வீசியது நோய்கள் பரவும் அபாயமும் இருந்தது.
நடிகை தமன்னா அந்த பகுதிக்கு துடைப்பத்துடன் சென்றார். குவித்து போடப்பட்டு இருந்த குப்பைகளை கூட்டி சுத்தம் செய்தார். தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்களும் தமன்னாவுடன் இணைந்து குப்பைகளை அள்ளும் பணியில் ஈடுபட்டனர். இதுபோல் தொடர்ந்து குப்பைகளை அகற்றும் பணியில் தமன்னா ஈடுபடப்போகிறாராம்.
கவலை வேண்டாம் தமன்னா ,உன் படம் வெற்றி அடைவது சிரமம்தான் ,அதுக்காக தெருவை கூட்டுவதா ,அதற்க்கு வேலை ஆட்கள் இருக்கிறார்கள் ,உனக்கு நிரந்தரம் வேலை வேண்டுமா தமன்னா ???கூட்டுற வேலை !!!!!!!!
இது எதனை நாளைக்கு ?? போதுமடா உங்க நாடகம் ,போயி வேலைய பாருங்கடா
அடுத்து என்ன சாக்கடையில் இறங்கி சுத்தம் செயய்வதுதணே?
பிரதமர் ஒரு தலைவன்,தலைவனின் சொல்கேட்டு தட்டாது நடப்பது நன்மக்கள் கடமை.நாடென்ன செய்தது நமக்கு என்று கேள்விகள் கேட்பது எதற்கு,நாம் என்ன செய்தோம் அதற்கு என்று நினைதால் நன்மை எமக்கு உமக்கு.நமக்கு தான் தலையே கிடையாதே,முலைத்தாலும் கிள்ளி எறிந்துவிடுவோமே ,,ஹின்ராப்,, உதாரணம்,வாழ்க நாராயண நாமம்.