142 அடியை எட்டப்போகும் முல்லைப் பெரியாறு அணை

 

mullaiperiyar35 வருடத்திற்கு பின்னர் 142 அடியை எட்டப்போகும் முல்லைப் பெரியாறு அணை.

 

தொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியுள்ளதால், நீர் திறப்பு வினாடிக்கு 900 கனஅடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

 

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீர்தேக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து, அதற்கான பணிகள் மேற்பார்வை குழு முன்னிலையில் நடைபெற்று வருகின்றன.

 

இந்தநிலையில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் 136 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம். தற்போது அணை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 141 அடியாக உயர்ந்துள்ளது.

 

அணையின் தற்போதைய நீர் இருபபு 7126 மில்லியன் கன அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1916 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. 900 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதே நிலை நீடித்தால் முல்லைப் பெரியாறு அணை விரைவில் 142 அடியை எட்டும் என்று தெரிகிறது.

 

அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே கரையோர மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

TAGS: