முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நீரைத் திறந்துவிட இயலாது என தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முல்லைப்பெரியாறு அணையில் நீர்மட்டம் 140 அடியைத் தாண்டிவிட்டுள்ள நிலையில், அந்த அணை உடைந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் என அஞ்சுகின்ற கேரள மக்களை ஆசுவாசப்படுத்தும் விதமாக, அணையிலிருந்து தமிழக அரசு நீரைத் திறந்துவிட வேண்டும் என கேரள முதல்வர் தமிழக அரசுக்கு எழுதியிருந்த கடிதத்துக்கு பதிலாக தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தின் இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிகள் வரையில் நீரைத் தேக்கிக்கொள்ள தமிழக அரசுக்கு இந்திய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்பது இந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
142 அடிகள் வரையில் நீரைத் தேக்கிக்கொள்ளும் அளவுக்கு முல்லைப் பெரியாறு அணை தற்போது வலுவாகவே இருக்கிறது என உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழு மிக அண்மையில் முடிவுசெய்துள்ளது எனவும் இக்கடிதம் குறிப்பிடுகிறது.
எனவே தற்போதைக்கு அணைக்கதவுகளைத் திறந்துவிடுவதற்கான அவசியம் இல்லை என தமிழக முதல்வரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைகை அணையில் கூடுமான அளவுக்கு நீரைத் தேக்கிக் கொண்டு முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க தமிழகம் முன்வர வேண்டும் என கேரளம் கோரியிருந்தது.
ஆனால் வைகை அணைக்கான நீர்ப் பிடிப்பு பகுதிகளில் வட கிழக்கு பருவமழைக் காலத்திலேயே மழை பெய்யும் என்றும், எனவே முல்லைப் பெரியாறு அணையில் தேக்குகின்ற நீரை வைத்துதான், இரண்டு அணைகளுக்கும் இடைப்பட்ட பாசனப் பகுதிகள் பயன்பெறும் என்றும் பன்னீர் செல்வத்தின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுக்கமைய தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணையில் நீரைத் தேக்கிக்கொள்வதில் கேரளம் தலையிடக் கூடாது என தமிழக முதல்வர் இக்கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையில் நீரைத் திறந்து விட்டு நீர்ப் பிடிப்பை 136க்கு குறைக்க உத்தரவிடச் சொல்லி உச்சநீதிமன்றத்தைக் கோரும் மனு ஒன்றை நேற்று சனிக்கிழமை கேரள அரசு தாக்கல் செய்திருக்கிறது. -BBC
புரியாத புதிர்… முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டவில்லை!
கூடலூர்: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று இரவு வரை 142 அடியை எட்டவில்லை. கடந்த 16 மணி நேரத்தில் சுமார் 40 மில்லியன் கனஅடி தண்ணீர் அணைக்கு வந்தும் நீர்மட்டம் உயராமல் உள்ளதற்கு தமிழக அதிகாரிகளே காரணம் என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழக, கேரள எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணை 152 அடி உயரமுடையது. கேரளாவின் நெருக்கடியால் 1979 முதல் 136 அடி மட்டுமே தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது. உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி ‘முதற்கட்டமாக 142 அடி தேக்கலாம்‘ என கடந்த மே மாதம் தீர்ப்பளித்தது.
இதை அமலாக்க மத்திய அரசின் பிரதிநிதி நாதன் தலைமையில், தமிழக, கேரள அரசு பிரதிநிதிகள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட் டது. 142 அடி தேக்க 13 ஷட்டர்களும் ஜூலை மாதம் இறக்கப்பட்டன. வடகிழக்கு பருவமழை கை கொடுத்து, அணை நீர்மட்டம் மளமளவென உயர்ந்து, நவம்பர் முதல் தேதி 136ஐ தாண்டி, தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நேற்று முன்தினம் நள்ளிரவு அல்லது நேற்று அதிகாலை அணை நீர்மட்டம் 142ஐ எட்டி விடும் என்ற நிலை இருந்தது. ஆனால் நேற்று மதியம் வரை வெளியான அதிகாரப்பூர்வ தகவலின்படி அணையின் நீர்மட்டம் 141 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1531 கன அடியாகவும், அணையிலிருந்து நீர் வெளியேற்றம் வினாடிக்கு 900 கனஅடியாகவும் இருந்தது. அணையின் இருப்பு 7,396 மில்லியன் கனஅடியாக உள்ளது.
நீர்வரத்து 1,531 கனஅடியில் வெளியேற்றம் 900 கனஅடிபோக வினாடிக்கு 631 கனஅடிவீதம் 16 மணி நேரம் சுமார் 40 மில்லியன் கனஅடி தண்ணீர் அணை க்கு வந்தும் நீர்மட்டம் உயரவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். ஏதோ அச்சுறுத்தலுக்கு பயந்தே அதிகாரிகள் வரத்து நீரை முழுவதும் வெளியேற்றிவிட்டு, பொய்யான தகவலை தருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
அணையின் நீர்மட்டம் 136 அடியை தாண்டிய பின், அணையைப் பார்வையிட வந்த கண்காணி ப்பு குழுவினர் ஷட்டரை இயக்கிப் பார்த்தபோது, 13வது ஷட்டர் முற்றிலும் இயங்கவில்லை என தெரிந்தது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி 142 அடி தண்ணீர் தேக்க மழை, நீர்வரத்து என அனைத்து வகையிலும் நமக்கு சாதகமாக உள்ளது. ஆனால் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் ஷட்டர் இயங்கவில்லை. இதனால், அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக்ககூடாது என கேரளா மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது. இதற்கு தமிழக அதிகாரிகளே காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர். கண்காணிப்புக்குழு நாளை அணையைப் பார்வையிட வரும் போது, 142 அடி நீரைத் தேக்கும் வகையில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
புரியாத புதிர்…
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 900 கனஅடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படும் நிலையில், வைகை அணைக்கு 1,833 கனஅடி தண்ணீர் வருவது புரியாத புதிராக உள்ளது. ஏனெனில் வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எங்குமே மழை இல்லை. நேற்று காலை நிலவரப்படி 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 49.15 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,833 கனஅடி. அணையிலிருந்து வினாடிக்கு 1,860 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்பு 1,882 மில்லியன் கனஅடி. -http://www.dinakaran.com
அணை பகுதியில் வேலை செய்யும் தமிழ்நாடு அதிகாரிகள் பல பேர் மலையாளிகள்! அதான் பல்வேறு சதிகள் செய்து அணையின் நீர் மட்டம் 142 அடியாக உயர விடாமல் கேரளாவுக்கு சாதகமான சதியில் இடுபட்டுள்ளனர் இந்த மஞ்ச துணி கழுத்தருட்டான்கள்!!!
ஜப்பானை அனுமதித்தால் தென்னாட்டை மலேசியாபோல் நாகரீக பூமியாக அலங்கரிப்பான்,எல்லோறுக்கும் வேலை வாய்ப்பு அமையும்.தண்ணீர் கொடுத்தால் என்ன கொடுக்காவிடில் யென்ன.கிடைக்காததை என்னி வருந்துவதை விடுத்து இயன்றதை செய்து புகழ் பெறலாமே,வாழ்க நாராயண நாமம்.
இழந்த அணைத்து நிலங்களுடன் தனி தமிழர் ஒன்றே தீர்வு!
Kayee தெரிந்து தான் பேசுகிறாரா? ஏற்கனவே பிரிட்டிஷ் காரனை உள்ளே விட்டதுக்கு நாய் படாத பாடு, இப்போ ஜப்பான்காரன் வேறயா?
அப்படி இல்லை குலவியாரே,விவசாயத்தில் அழியும் அவலம் நீங்குமே.மலேசியாவில் அவதிபடவில்லையே நாம்.மாற்றுவழியை ஆராய்ந்தே ஆக வேண்டும்.தொழில் பேட்டை,வீடமைப்பு,நகரம் இவைக்குல் ஒடுங்கிவிடும் வருமை.தொழில் சொந்த வீடு,வியாபாரம் வசதி,வீதியில் வாழும் மக்கள் இருக்காது.கிராமத்தில் வாழ்கிறது தென்னாடு,வாழ்க நாராயண நாமம்.