சென்னை: தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் குறைந்து வருவதாகவும், கருவிலேயே கண்டறிந்து அழிக்கப்படுவதே இதற்கு காரணம் என சமூக அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தில் செயல்படும் மனித ஆர்வலர்களுக்கான அமைப்புகள் சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசிடம் கேட்டு பெற்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 6 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பாலின விகிதம் சென்னை மாவட்டத்தில் 21 புள்ளிகள் குறைந்து 950 ஆகவும், திருவள்ளூர் மாவட்டத்தில் 8 புள்ளிகள் குறைந்து 946 ஆகவும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 புள்ளிகள் குறைந்து 959 ஆகவும் உள்ளது. இந்த பாலின விகிதம் இயற்கையாக 985 ஆக இருக்க வேண்டும்.
ஆனால், மிக குறைவாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. கருவிலேயே குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிந்து பெண் குழந்தை என்றால் அதை கருவிலேயே கலைத்துவிடும் போக்கு பெருகி வருவது தான் இதற்கு காரணம் என இந்த அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளன. மேலும், இந்த கொடிய செயலுக்கு ஸ்கேன் மையங்கள் துணைபோவதுடன், சட்டத்தை மீறி ஆண், பெண் குழந்தைகள் பற்றிய தகவலை தெரிவிப்பதும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த அமைப்பினர் 2012ம் ஆண்டு பிறப்பு விகிதம் குறித்து கேட்டதற்கு தகவல் ஆணையம் அளித்த பதிலில் தமிழகத்தில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 952 பெண் குழந்தைகள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 18 மாவட்டங்களில் மாநில சராசரி அளவை விட குறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக 3 மாவட்டங்களில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் 900க்கும் குறைவு. காஞ்சிபுரத்தில் 914, விழுப்புரத்தில் 889, கடலூரில் 896 ஆக உள்ளது. உலகில் பல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை புரிந்து வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, குழந்தை பிறப்பதற்கு முன் கருவின் பாலினத்தை அறியும் யுக்திகள் தடை சட்டம் 1994ஐ கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையேல் தமிழகத்தில் வருங்காலத்தில் பெண் குழந்தைகள் விகிதம் பெருமளவில் குறையும் நிலை ஏற்படும்.
கடுமையான சட்டம் இல்லை
தமிழகம் முழுதும் 4,568 ஸ்கேன் மையங்கள் உள்ளன. இவற்றை மாநில, மாவட்ட, தாலுகா அளவிலான அமலாக்க குழுக்கள் கண்காணிக்க வேண்டும். 2 மாதத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. இதனால், பணத்திற்கு ஆசைப்பட்டு கருவில் சிசுவை அழிக்கும் கொடிய செயலை இந்த ஸ்கேன் மையங்கள் செய்வதாக கூறப்படுகிறது. சமீபத்தில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டபோது அங்கு ஆவணம் ஏதும் பராமரிக்கவில்லை என்பது தெரிந்தது. சட்டத்தை மீறும் ஸ்கேன் மையங்கள் மீது இதுவரை தமிழகத்தில் 77 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், குறைந்தபட்ச தண்டனையாக ஒருநாள் முழுதும் நீதிமன்றத்தில் இருக்கவைப்பது மட்டுமே தண்டனையாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், மஹாராஷ்ட்ராவில் 70 டாக்டர்களின் அங்கீகாரத்தை மருத்துவ கவுன்சில் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. -http://www.dinakaran.com


























கண்ணகி, சீதை, நல்லதங்காள், இந்திராகாந்தி, ஜெயலலிதா பிறந்த நாட்டில் இப்படியா?
இதற்க்கு எல்லாம் முக்கிய காரணம் இந்து மதம்.
குழந்தையை கொல்லும் நரனுக்கு நரகம் காத்திருக்கு.
இந்துமதமா? இது என்னடா புது கதையாய் இருக்கு!
இந்துமத்தில் சிசு கொலை பற்றி எந்த இடத்தில சொல்லியிருக்கு ? ஒரு வேலை என் தாய் தமிழ் படித்த உன் தாய் தமிழ் அகராதியில் உள்ளதோ?
குருட்டு தனமாக பேச வேண்டாம். எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்தால் புரியும் நான் சொல்வது. இதைப்பற்றி விவாதிக்க என்னால் முடியும் ஆனாலும் என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை கூறுகெட்ட பேச்சில். நானும் இந்துதான் ஆனாலும் நான் உண்மையையும் பகுத்தறிவையும் ஏற்றுகொள்பவன். அப்படி johorebaru வந்தால் தெரிவிக்கவும் –சந்தித்து நாகரிகமாக பேசலாம்.