தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களின் உயிரைக் காப்பாற்றிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த அகஸ்டஸ், எமர்சன், வில்சன், பிரசாந்த், லாங்லெட் ஆகிய 5 மீனவர்களுக்கும் கொழும்பு உயர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்திருந்தது.
இந்த 5 மீனவர்களின் உயிரைக் காப்பாற்ற பிரதமர் மோடி எடுத்த முயற்சிகளும், ராஜ தந்திரங்களும் மிகவும் பாராட்டுக்குரியது.
ஐந்து மீனவர்களின் விடுதலையால் ஐந்து குடும்பங்கள் மட்டுமல்ல் ஒட்டுமொத்த தமிழகமே சந்தோஷம் அடைந்துள்ளது.
தினசரி கடலுக்குள் சென்று மீன் கிடைத்தால் மட்டுமே வாழ்க்கை என்று போராடுபவர்கள் மீனவர்கள். இப்படி தினம் தினம் வாழ்க்கையுடன் போராடும் மீனவர்களுக்கு இப்படி தேவையற்ற தொந்தரவுகள், மேலும் அச்சுறுத்தலையும் தரும்.
இந்த சமூக மக்கள் இனி வரும் காலத்திலாவது பயமின்றி நிம்மதியாக தொழில் செய்ய தகுந்த பாதுகாப்பை ஏற்படுத்தித் தர பிரதமர் மோடி முயற்சி எடுக்க வேண்டும் என்று இதன்மூலம் வேண்டுகோள் வைக்கிறேன்” என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். -http://www.nakkheeran.in
இப்படி எல்லாரும் அறிக்கை விடுப்பதும், பிரதமருக்குக் கடிதம் அனுப்புவதும் ஒன்றும் பயனில்லை என்னும் நிலை உருவாகிவிட்டது.வேறு ஏதாவது கைவசம் இல்லையா? பெரியார் போற்றி! போற்றி!
மலேசியாகினி ,இந்த வெப் சைட்டில் ENGLISH ,MALAY , TAMIL என்று குறிப்பிட்டு இருக்கிறது ,மலாய் ஆங்கிலம் பார்த்தீர்களானால் அரசியலை பற்றிதான் பெரிதும் எழுதுவார்கள் ,ஆனால் இந்த தமிழ் வளாகத்தில் அரசியல் மட்டும் அல்லாமல் சினிமாவையும் சேர்த்து தன் விளம்பரத்துக்காக எழுதுகிறார்களே இது ஞாயமா ?சமுதாயம் உருப்பிடுமா ?? உங்கள் பற்றிக்கைகும் எழுத்துக்கும் விளம்பரம் வேண்டும் என்றால் எதற்கு சினிமாவை பயன் படுத்துகிறீர்கள் ?? பொழப்பு நடத்த உங்களுக்கு வேற வலி தெரியவில்லை யா ??
நரகாசுரனே..உங்க ‘வலி’ ரொம்ப நல்லாவே புரியுதுங்க. அது ஏன்’னா மற்ற செய்திகளைப் படிக்காதவங்க இந்த சினமா செய்திகளைப் படித்தாவது தங்கள் மொழி ஆற்றலை வலுப்படுத்திக்கொள்ளட்டுமே என்பதற்காக இருக்கலாமோ
ஏற்கனவே ஒருத்தன் ” அரசியலுக்கு வருவேன் வரமாட்டேன், ஆலம் தெரியாமல் காலை விடமாட்டேன், ஆண்டவன் நினத்தால் வரவேன், மக்கள் விரும்பினால் வருவேன் என்று சொல்லும் கூட்டதில் விஜயையும் சேர்ந்து கொல்வார்.
இந்த சினமா செய்திகளைப் படித்தாவது தங்கள் மொழி ஆற்றலை வலுப்படுத்திக்கொள்ளட்டுமே!! அட பாவிகளா தமிழ் மொழியை சினிமாவின் மூலமாக கற்று கொள்வதா ,அதற்க்கு தூக்கு மாட்டிகிடு சாகலாமே ,எதற்கு தமிழ் பள்ளிக்கூடம் இருக்குது ,நலத்தா போச்சி இந்த அம்நோகரர்கள் தமிழ் பள்ளியையும் சீன பள்ளியையும் மொட்ட போகிறார்கள் அதற்க்கு பதிலாக உங்கள் பிள்ளைகளை தமிழ் சினிமாவுக்கு அனுப்புங்கள் தமிழ் மொழி கற்க ,தமிழன் விளங்கிடுவான் .முதலில் நரகாசுரன் சொன்னது போல் இந்த வளாகத்தில் வரும் சினிமா செய்திகளை அகற்ற வேண்டும் .
அட MK. நீ சரியான மொக்கைதான். நீ தமிழ் பள்ளிக்குப் போய் என்ன பயன்? நான் எழுதிய கருத்தை அரைகுறையாகப் படித்து விட்டு பதில் எழுதியதில் இருந்து தெரிகிறது நீ தமிழ்ப்பள்ளிக்குப் ‘போயும்’ பலனில்லை என்பது. எனவே, மேலே சொன்னது போல நீ தூக்கு மாட்டிக்கொள்வதில் எனக்கு ஆட்சேபம் இல்லை. தமிழ்பள்ளிகள் ஏற்கனவே அந்த நிலையில் தான் இருக்கின்றன. பெயருக்குத்தானே இப்போது தாய்மொழிப்பள்ளிகள்… எத்தனைப் பாடங்கள் தாய்மொழியில் போதிக்கப்படுகின்றன? தாய்மொழிப்பள்ளிகளை குறிப்பாக தமிழ்ப்பள்ளிகளை உம்நோகாரனிடம் அடகு வைத்து 30 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இப்போது அரைகுறைத் தூக்கத்தில் விழித்தெழுந்து குய்யோ முறையோ என்றால் யார் என்ன செய்ய முடியும்? எங்களின் இப்போதைய நிலை இங்கே எப்படியாவது தமிழ் வாழ்ந்தால் போதும் என்பது தான். அது தமிழ்ப்பள்ளிகளால் முடியும் என்பது 100 க்கு 75 விழுக்காடுதான் சரியானதாக இருக்கும்.