39 இந்தியர்களை படுகொலை செய்த ஐ.எஸ்.ஐ.எஸ்?

isis_leader_001ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிரியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக் மீதும் போர் தொடுத்தனர்.

இந்த போரின் போது ஈராக்கின் 2வது பெரிய நகரமான மொசூல் நகரத்தில் ஜூன் 10-ந் திகதியன்று 91 வெளிநாட்டவரை ஐ.எஸ். தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.

இவர்களில் 40 பேர் இந்தியவர்கள். 51 வங்கதேச நாட்டவர். கடத்தப்பட்ட இந்தியர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் அனைவரையும் மீட்க பஞ்சாப் முதல்வர் பாதல் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்ததுடன் கடத்தப்பட்டோர் குடும்பத்தினருக்கு மாதாந்திர நிதி உதவியையும் அறிவித்திருந்தார்.

இருப்பினும் 40 இந்தியர்களின் நிலை என்ன என்று தெரியாமல் இருந்து வந்தது. இந்நிலையில் குர்திஸ்தானின் ஏர்பில் நகரில் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த ஷபி மற்றும் ஹாசன் ஆகியோர் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளனர்.

அந்தப் பேட்டியில் “கடத்தப்பட்ட 40 இந்தியர்களில் ஹர்மீத் என்பவர் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி வந்தார். அவர் எங்களிடம் கடந்த யூலை மாதம் 39 இந்தியர்களையும் தீவிரவாதிகள் படுகொலை செய்ததை தாங்கள், நேரில் பார்த்ததாக ஹர்மீத் தெரிவித்தார் என்று கூறியுள்ளனர்.

ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி வந்த வங்கதேசத்தவரின் இந்தப் பேட்டி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்த இளைஞர் நாடு திரும்பினார் (வீடியோ இணைப்பு)

isis_arif_001ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் இணைந்திருந்த இந்திய இளைஞர் ஒருவர் நாடு திரும்பியுள்ளார்.

ஈராக் மற்றும் சிரியாவில் செயல்பட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்திருந்த, மகாராஷ்டிராவின் தானே மாவட்டம் கல்யாணைச் சேர்ந்த 4 இளைஞர்களில் ஒருவரான ஆரிப் மஜீத் நேற்று இந்தியா திரும்பியுள்ளார்.

இவரை தேசியப் புலனாய்வு அமைப்பு(என்.ஐ.ஏ) தனது பாதுகாப்பில் எடுத்து விசாரித்து வருகிறது.

ஈராக்கிற்கு யாத்திரை சென்ற இளைஞர்கள் 4 பேர் ஐஎஸ் அமைப்பில் இணைந்து விட்டதாக ஒரு சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது, மேலும் நால்வரில் ஒருவர் போரில் கொல்லப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இருப்பினும் இச்செய்தி இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், ஆரிப் என்பவர் இந்தியா திரும்பியுள்ளார்.

அந்த இளைஞர்களிடம், ஐ.எஸ் அமைப்பின் தீவிரவாத நடவடிக்கைகள் மற்றும் ஈராக்கில் அந்த தீவிரவாத அமைப்பினால் கடத்திச் செல்லப்பட்ட 40 இந்தியர்களின் நிலைமை குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது. -http://www.newindianews.com

TAGS: