கடந்த 26-11-2014,அன்று சென்னை மயிலாப்பூரில் தமிழீழ விடுதலைப்போரில் இன்னுயிர் ஈர்ந்த தமிழர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சியை ஒழுங்கமைப்பதற்க்கான முயற்ச்சிகளை இன உணர்வோடு முன்னெடுத்த திராவிடர் விடுதலை கழகத்த சேர்ந்த நிர்வாகிகளில் ஒருவரான முழக்கம் உமாபதியை சென்னை அமிராமிபுரம் காவல்துறை உதவி ஆய்வாளர்களான இளையராஜா,கலைசெல்வி,மற்றும் கவலர் வடிவேலு,ஆகியோர் கொண்ட குழுவினர் மிகக்கொடூரமாக நாகரிகமற்ற முறையில் தாக்கி இருந்தனர்.
படுகாயமடந்த உமாபதி சென்னை ராஜிவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
இத்தாக்குதலை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் நேற்றைய தினம் கண்டன அறிக்கை வெளியிட்டதோடு இன்றைய தினம் உமாபதியை நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். இவரோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் வன்னி அரசுவும் உடன் இருந்தார்.