வட இந்திய மாநிலமான பஞ்சாபில், கண்புரை ( கேட்டராக்ட்) அறுவை சிகிச்சை முகாம் ஒன்றில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட குறைந்தது 15 பேர் தங்கள் பார்வையை இழந்திருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் நிரந்தரமாகவே பார்க்கு சக்தியை இழந்துவிட்டார்களா அப்படியென்றால் எவ்வளவு பேர் இது போல் பார்வையை இழந்தனர் என்பது குறித்து தம்மால் சொல்வதற்கு இன்னும் ஒரு வார காலம் பிடிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அறக்கட்டளை ஒன்றின் ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்த முகாம் அனுமதியின்றி நடத்தப்பட்டதாக அமிர்தசரஸ் நகரின் தலைமை மருத்துவ அறுவை சிகிச்சை அதிகாரி பிபிசியிடம் கூறினார்.
பஞ்சாப் சுகாதார அதிகாரிகள் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள்.
இந்த சம்பவம் இந்தியாவில் இலவச மருத்துவ முகாம்களில் நிலவும் பாதுகாப்பு தரம் குறித்து மேலும் கவலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த மாதம்தான், சத்திஸ்கார் மாநிலத்தில் அரசு நடத்திய ஒரு குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முகாமில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 15 பெண்கள் இறந்தனர். -BBC
பாவம்! வயதானவர்கள்! வயதான காலத்தில் இப்படியும் ஒரு துன்பம்.இங்கும் நமக்கு எச்சரிக்கை தேவை!