ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்காக பன்வெலில் இருக்கும் கல்லூரி ஒன்றின் 40 மாணவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர் என்று ஆரிப் மஜீத் தெரிவித்துள்ளான்.
சிரியாவில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்து, பின்னர் இந்தியாவுக்கு திரும்பி வந்துள் ஆரிப்பிடம் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
அவன் கூறியதாவது, நான் படித்த கல்லூரியில் என்னையும் சேர்த்து 40 மாணவர்கள் ஐ.எஸ் இயக்கத்தில் சேர மூளைச்சலவை செய்யப்பட்டோம்.
நாங்கள் நக்கீப் (உருது மொழியில் தலைவன் என்று பொருள்) என்று அழைக்கப்படுகிறோம். ஐ.எஸ்.அமைப்பில் சேர்ந்து ஈராக்கில் போராடும் வாய்ப்பு கிடைத்த போது என்னை தவிர மற்றவர்கள் பின்வாங்கிவிட்டனர்.
நானும் கல்யாணை சேர்ந்த 3 இளைஞர்களும் ஈராக் சென்றோம். ஈராக்கிலும், சிரியாவிலும் மேலும் 20 இந்திய இளைஞர்களை ஐ.எஸ். முகாம்களில் பார்த்தேன்.
இவர்களில் பலர் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளான்.
40 மாணவர்கள் பற்றி ஆரிப் கூறிய தகவல் தேசிய விசாரணை அமைப்பு ஏற்கனவே விசாரணை நடத்தி கண்டுபிடித்த தகவல்களுடன் ஒத்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக அந்த கல்லூரி நிர்வாகிகளிடமும் மாணவர்களின் பெற்றோரிடமும் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-http://www.newindianews.com